பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212

டி

அப்பாத்துரையம் - 28

ஒன்றிரண்டு அம்புகள் துளைத்தன-அவற்றின் வேதனையால் அவள் கூவிய கூக்குரல் கடல் அலைகளின இரைச்சலையும் தாண்டி நீரில் பரவிற்று. அடுத்த கணம் அவள் நிலை தடுமாறிய வண்ணம் மிதந்தாள். அவள் உடலுடன் தன் உடலையும் பிணைத்து வானவனேந்தல் நீந்த வேண்டியதாயிற்று. ஆனால் காதலின் புது நம்பிக்கை தந்த புதுவீரம் அவனை ஆயிரம் வீரரின் வீரத்துடன் ஊக்கிற்று. ஆயிரம் யானைகளின் துதிக்கை களுக்குரிய வலு அவன் ஒரு கையில் வந்து செயலாற்றிற்று.

படகிலிருந்து காலனின் சீற்றம் போல் சீறி வந்தது ஒரு வேல், வேலின் ஒரு நுனி வானவனேந்தல் துடையைக் குறிபார்த்துப் பாய்ந்தது. ஆனால் மறு நுனியிலோ காலனின் பாசக்கயிறு போல் நீண்ட கம்பி நூல் இணைக்கப்பட்டிருந்தது. வேல் எதிரியைச் சாய்க்காவிட்டால் கூடக் குற்றுயிருடன் அவனை ஈர்த்துவரும்படி படகிலுள்ளோர் திட்டமிட்டிருந்தனர் என்பதை அது காட்டிற்று! அரையுணர்வுடன் மிதந்திருந்த வேண்மாள் கூட அத்தோற்றம் கண்டு துடிதுடித்தலறிவிட்டாள். ஏனெனில்வேல் அவளஞ்சியபடி வானவேந்தல் துடையில் பாய்ந்தது. பின் துடையைத் துளைத்து மறுபுரம் பாதி உருவி அப்படியே நின்றது. வேல் குறியில் சென்று பொருந்தியது கண்டதும் படகிலுள்ளோர் கூவி நூலை இழுக்கத் தொடங்கினர். பாவம்; காதலிக்காக உயிரைப் பணயம் வைத்து அவளையும் ஏந்திக்கடல் நோக்கிச் சென்ற காளையின் உடல் குற்றுயிருடன் காலன் பிடியில் சிக்கிப் பின்னேறத் தலைப்பட்டது. காதலியின் உடலும் இப்போது அப்பிடியின் இழுப்புக்களாயிற்றுவே!

வேண்மாளும் குற்றுயிராகவே மிதக்கிறாள் என்பதை வானவனேந்தல் அறிவான். ஆனாலும் மரணப்பிடிக்கு இலக்காவதைவிட அவளாவது கடலின் பிடியில் துணிந்து முன்னேற வழியிருக்கட்டும் என்று அவன் அந்த அவல நிலையிலும் எண்ணினான். எனவே அவளை ஏந்திய கையை அவன் நழுவ விட்டான். "வேணி! உன் காதலுறுதி பெற்ற பின் எனக்கு வாழ்வும் தாழ்வும் ஒன்றுதான். சாவு எனக்கு இப்போது இனிக்கும் நறுந்தேன்.நான் களிப்புடன் செல்கிறேன். நீ எப்படியும் கடலில் தப்பிச் செல். பிழைத்திருந்தால் என்னை மறவாதே!” என்றான்.