பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 28

காலம் எதுவும் தெரியவில்லை. அவர் காலத்திலேயே இவை அறியப்படாது போயினபோலும். புறச் சான்றுகள் கிடைக்காத துடனன்றி, அகச் சான்றுகூட மிகக் குறைவே, அதனால் ஆசிரியர் பெயரும் இடமும் அறியக்கூடவில்லையாயினும், ஓரளவு கால வரையறை மட்டும் ஏற்பட முடிகிறது. சமண சமயநெறியை அலசிக் காட்ட முயலும் இவ்வாசிரியர், தமிழில் வேறெந்த சமண நூல்களையும் குறிப்பிடாமல் மூன்று நூல்களைமட்டும் மேற்கோளாகக் கொண்டு குறிக்கிறார். அவை தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் ஆகியவை. இவை மூன்றுமே சமணரால் இயற்றப்பட்டவை என்று கொள்ள இடமுண்டு. முதலது இலக்கண நூல்; பிந்திய இரண்டும் ஒழுக்க நூல்கள். இவையன்றி வேறு சமண நூல்களை அவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. சமய ஆராய்ச்சி செய்யும் இவ்வாசிரியர் இவைபோலப் பிற சமண நூல்களும் இருந்திருப்பின் குறிப்பிடாதிரார் என்பது உறுதி. ஆகவே, அவை மூன்றேயன்றி மற்றச் சமண நூலும் அவர் காலத்தில் இல்லையென்றே கொள்ளலாம்.

காலத்தைத் திட்டமாகக்

இம்மூன்று நூல்களுள்ளும் ம் தொல்காப்பியத்தின் கூறமுடியவில்லையாயினும், மூன்றிலும் அதுவே முந்தியது என்பது ஒரு தலை.

இரண்டாவதாகிய நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்டதென்றும், அவர்கள் வடநாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகப் பத்திரபாகு என்பவர் தலைமையில் தென்னாடுவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரபாகு, சந்திரகுப்த மௌரியன் என்ற போசனை மாண வனாகக் கொண்டவர். அவர் பஞ்சத்தால் தென்னாட்டுக்கு வந்தபோது, சந்திரகுப்தனும் உடன் சென்றான் என்று சமணர் வரலாறு கூறுகிறது. இதனால் சந்திரகுப்தனும் பத்திரபாகுவும் ஒரு காலத்தவர் ஆவர். சந்திரகுப்தன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ஆண்டவன். ஆகவே, பத்திரபாகுவின் காலமும், நாலடியார் காலமும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்று கூறலாகும்.

மூன்றாவது நூலாகிய திருக்குறளின் ஆசிரியர் சமணர் மரபுரைப்படி ஏலாச்சாரியார் அல்லது குந்தகுந்தாசாரியார் என்பவராவர். இவர் காலம் சமணர் வரலாற்றின்படி கி.மு. முதல்