பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

213

அவன் உள்ளம் அவளைச் சுட்டது அவன் விடுத்த கையை அவள் எட்டிப் பிடித்துக் கொண்டாள். “நீ செல்லும் திசையில்தான் எனக்கு இனி வாழ்வும் சாவும்-நான் இனி விரும்பும் விடுதலை அது ஒன்று-வாழ்ந்தால் உன் காதலுக்காக வாழ்வேன்- மாண்டால் அதற்காக மாள எனக்கும் தெரியும்,” என்றாள் அவள். அவனை ஈர்த்திழுத்துச் சென்ற வேலைக் கூட அவள் எட்டிப் பிடித்து அதற்கு முத்தமிட முயன்றாள்.

இன்னும் ஒன்றிரண்டு கணம். சிங்கள வீரர் பழிக்கு அக்காதல் துணைவர் உடலும் உயிரும் இரையாக இருந்தன. ஆனால் அவர்கள் அஞ்சிய அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை.

கடலலைமீது அலை வாயில் திரிந்த சோழர்களது படைவீரர்கள் நாள்தோறும் இமை கொட்டாது தருவை ஏரிப்பக்கம் கண்ணோட்டம் செலுத்தியிருந்தன. சேணாட்டுக் கன்னியரைக் கைப்பிடித்த செல்வர் பலர்-சோழர்க்குச் சொந்தமான தமிழ்க் குருதியைத் தம் நரம்பிலும் ஓட விட்ட பாண்டிய நாட்டு, சேரநாட்டுத், தமிழர்-கொடுங்கோல் நிலமான தாயகம் விடுத்து அண்மைத் தாயகம் வந்து சேரத் துடித்த துடிப்பும், அதற்காகச் சாவுடன் அவர்கள் மேற்கொண்ட கோரப் போராட்டமும் சோழ வீரர் அறியாததல்ல. அத்தகையோர் கடலலைகளுடன் போராட்டம் நடத்திய நேரத்திலெல்லாம், சோழ வீரர்கள் நீரிலே பாய்ந்து அவர்களைக் காப்பாற்றியே வந்தனர்.

ஒரு

அத்தகைய ஒரு படகு, படகிலிருந்து குதித்து நீந்திய வீரனுடன் சிங்களப்படகை நோக்கி விரைந்து கொண்டிருந்த உடல்களைக் கைப்பற்றப் போராட்டம் நடத்தியது. நீந்திச் சென்ற வீரனின் கைவாள் வேலின் பாசமாகிய கம்பு நூலை முதலில் அறுத்தது. படகிலுள்ளோர் அதன்பின் எளிதாக வானவனே ந்தலையும் அவன் உடலில் பாய்ந்த வேலைப்பற்றி இருந்த வேண்மாளையும் அருமுயற்சியுடன் படகிலேற்றினர். இருவரும் படகுடன் சோழர் கடற்படைத் தலைவன் அண்ணல் பல்லவராயன் முன் கொண்டு வரப் பட்டபோது, சோழ வீரர் அனைவரும் கடலலையுடன் போட்டியிட்டு ஆரவாரமிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடினர். ஒரு வீரன்தான்; ஒரு வீராங்கனைதான் - ஆனால் பாண்டி நாட்டின் தன்மானத்தையே, சேர நாட்டின்