பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

(214) || வீரத்தையே அந்த இருவர் உடலை மீட்டதன் மூலம் புதுப்பித்துவிட்டதாகச் சோழ மக்கள் இறும்பூதெய்தினர்.

நீந்திச் சென்று கம்பி நூலறுத்த வீரன் வேறு யாருமல்ல; அண்ணல் பல்லவராயனின் இளங்காளை பெருமாவளவனே! அவனுடன் படையைச் சாக்களத்திற் கோட்டி அவனது பெரும் புகழில் பங்கு பெற்றவன் அவன் மாமனும் அண்ணல் பல்லவராயனின் மைத்துனனுமான கோவகிளங்கோமான் ஆவான்; இருவருக்கும் அச்சமயத்திலேயே ‘வளவனேறு’ 'சென்னிப்புலியேறு' என்ற பட்டங்கள் அண்ணல் பல்லவ ராயனால் கடலலை மீதே-நிலவொளியிலேயே வழங்கப்பட்டது.

வேண்மாள் தன்னுணர்வு பெற நாழிகை அல்ல; நாட்கள் யின. வானவனேந்தல் சாவுக்கும் உயிருக்கு மிடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். ஆயினும் வேண்மாளின் கண்களிலிருந்து பெருகிய காதல் வெந்நீர் அவன் கோரப் புண்களை மெல்ல மெல்ல ஆற்றின. எதிரிகளின் வேல் சென்று துளைத்த அவன் துடையின் வழி அவன் காதல் உயிர் அடிக்கடி சென்று மீண்டது. மேலும் சோழ கடற்படை மருத்துவர் அனைவரும் ‘போகும் உயிர் இனி மீளாது' என்று கைவிட்ட பின்னும் நாட்கணக்காக, வாரக் கணக்காக வானவனேந்தல் உயிர் உடலை விட்டோடாமல் ஊசலாடிற்று.

கொல்லும் வேலினும்-நஞ்சினம் கொடிது தமிழ் மாதர் காதல் விழிகள் என்பர் கவிஞர். ஆனால் அதே கவிஞர் அதற்கு மாற்றாக அதே காதல் விழிகளைப் பாடியுள்ளனர். அவ்விழிகளே அமுதமாய் இறக்கும் உயிர்களுக்கு இறவா இன்பமும் அளிக்கவல்லன என்று சுட்டிக்காட்டியுள்ளனர். வானவனேந்தல் உயிர் வேண்மாளின் இக்காதல் வரலாற்றுக்குத் தக்க சான்றாய் இலங்கிற்று. அவன் சாவை நோக்கிச் சென்று அவ்விழிகளின் கண்ணீரின் ஆற்றலால் மெல்ல மீட்சி யடைந்தான் பல மாதங்கள் சென்றபின், கடற்படை மூல தளத்தருகே சோணாட்டில் ஒரு மருத்துவமனையில் வேண்மாளருகே கிடந்த அவன் உடல் படிப்படியாகத் தேறுதலுற்றது. எழுந்து உட்காரலானான். பின்னும் சில மாதங்களில் புத்தார்வத்துடனும் புதுத் துடிப்புடனும் புதிதாகத் திரட்டப்பட்ட சோழர் பெரும்படையில் அங்கம் வகித்தான்.