கன்னியின் சோதனை
215
ஆண்டுகள் பல கழிந்தன. சோழ நாட்டுத் தரைப் படைகளாலும் கடற்படைகளாலும், புதிதாக 'வாள் படை'யாக திரட்டப்பட்ட சேரர் விற்படை, வேறுபடை, கவணெறி கடற்படைகள் ஆகியவற்றின் கூட்டுச் செயலாலும், பாண்டியப் படைவீரர் மட்டுமன்றி, ஆடவர் பெண்டிராகிய பொது மக்கள் காட்டிய ஒப்பற்ற வீர தீரச் செயல்களாலும் பாண்டி நாட்டிலிருந்து கடைசிச் சிங்கள வீரர்வரை அப்புறப் படுத்தப்பட்டனர்.
அவன் பாண்டி நாட்டுப் போர்களில் பழக்கப்பட்டவன், தருவக்கரை போராட்டம் புத்தார்வத்தையும் புது வலிவையும் புதுப் பயிற்சியையும் தந்திருந்தன. அவன் பாண்டிநாட்டு நிலப்போர்களிலும் கடற்போர்களிலும் நில நீர்ப் போர்களிலும் மாறிமாறி ஈடுபட்டுப் பெரும் புகழ் நிறுவினான். இறுதியில் அவனே சோழப்படை நாயகத்தின் தனிப் போராகப் பாண்டி நாட்டுப் படை நாயகமாகவும் பாண்டிய சோழப்படைகளின் இணையற்ற தனிப் பேராளாகவும் பொறுப்பேற்றான். அவன் தலைமையில் பாண்டி நாடு மீண்டும் பண்புற்றது. சேர நாடு மீண்டும் சீரமைந்தது.
காதற் கன்னியர் கடைக்கண் ஆற்றல் எந்த அளவு சாதிப்பதற்கரியனவற்றையும் சாதிக்க முடியும் என்பதைத் தன் கடுஞ்சோதனை மூலம் வேண்மாள் காட்டிவிட்டாள். அவர்கள் முதல் மகவு இருவர் உள்ளத்திலும் மற்றெல்லா எண்ணங் களையும் மறக்கடித்து ‘தருவைக் கரசு' என்ற
பெரும்
பெயரையே ஒரு புதிய பட்டமாக்கி, அக்குழந்தைக்குச் சோழப் பெரும்படை நாயகனான அண்ணல் பல்லவராயனே பெயரிட்டு விழா நடத்திய போதும், சோழப் பெரும் பேரரசன் அச்செல்வன் எழுத்தறிவிப்பு விழாவிலே மீண்டும் அவனுக்கு 'மும்முடிப் பாண்டியன்' என்ற விருந்தளித்த போதும், வீரக்காதலராக வாழ்வு தொடங்கிய அவன் தாய் தந்தையர் விடுதலைப் புகழ் தந்த தம் காதலைக்கூட மறந்து மகிழ்ச்சியிலே திளைக்க வேண்டியவராயினர்!