பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

217

வட்டமிட்ட அவள் மென்மலரடிகள் அவனைத் தன்னிலையழிய வைத்தன.

அவளைக் கண்ணால் பருகுவது போதாதென்று கையால் பற்ற அவன் எழுந்தான். பிடி நழுவ நழுவ, தள்ளாடிய உடலுடனே அவனைச் சுற்றித் தானும் நெளிந்தாடினாள்.

“ஆகாகா! அஃகாக!”

"மாயாவி என்று பேர் படைத்த, கடற்படைத் தலைவன் அதிகன் அஞ்சியே என்கையில் விரைவில் சிக்க இருக்கிறான். நீ என் கைக்குத் தப்பலாம் என்று நினைக்கிறாயா? வா, என் கற்கண்டே! சிங்களச் சிங்காரச் செல்வமே! என் வெண்ணெய் உடலில் குளித்து என் உள்ளம் கொதிப்பாறட்டும்! உன் தேன் முகத்தால் என் பசியின் துடிப்பகற்றுவாய்!' என்றான்.

அவனிடம் பிடிகொடாமல் நழுவிக்கொண்டே அவனை மேலும் பேச்சில் இழுக்க முயன்றாள் அவள்.

“என்ன, அதிகன் அஞ்சியா? போதையில் எதுவும் பேசுவது எளிது. பிடித்த பின்னல்லவா இப்படி சிரிக்க வேண்டும்!" என்றாள் அவள்.

பொலந்தரர் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

“சிக்கியது போலத்தான். நம் கடற்படைத் தலைவர் அரிமானேந்தல் காங்கேயன் துறையின் காவலுக்குச் சென்றிருப்பதாக அவனுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆகவே அவன் நம் கோட்டையைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இங்கே வரப் போகிறான். வந்து சிக்கப் போகிறான்; பொறியில்! அஃகா!”

"தலைவர் அரிமான் போனதுதான் எல்லாருக்கும் தெரியுமே! அப்படியிருக்க அவன் சிக்கப் போவது என்பது உங்கள் அவசரக் கணக்கே தவிர வேறு என்ன? வீண் சம்பம் அடிக்காதேயுங்கள்!”

பொலந்தரர் கனைத்த கனைப்பு மாளிகையின் மோட்டை அதிர வைத்தது.

66

"ஆகா, பார்த்தாயா? உனக்கு அழகு இருக்கிறது. அறிவு இல்லை. அரிமான் போகவில்லை. போனதாக நான்தான் பொய்