(218
||–
அப்பாத்துரையம் - 28
செய்தி பரப்பினேன். அதை நம்பி அவன் புத்தளத்தைத் தாக்க இருக்கிறான். பாதிப்படைகள் இறங்கியதும், அரிமான் கடற்பக்கமிருந்து பின்னணியில் தாக்கப் போகிறார். நிலத்தில் இறங்கவும் முடியாமல் கடலில் தப்பவும் முடியாமல், தென்னிலங்கையில் தன் முடிவை எளிதாகக் காணப் போகிறான்!"
நங்கை தெம்பாங்கின் செந்தாமரை முகத்தில் ஏளனக்
குறிதொனித்தது. “உங்கள் பேச்சு எதற்குச் செல்லும்? அரிமான் போகவில்லை என்றீர்கள். இப்போது கடலிலிருந்து வருவார் போகவில்லை என்கிறீர்கள்! இங்கே துணையற்ற பெண்களிடம் பேசி ஏய்க்கலாம். தென்னகத் தமிழரிடம் இதெல்லாம் செல்லுமா?” என்றாள்.
அவள் முகம் சிறிது சுளித்தது.
'பெண்களுக்கும் அரசியலுக்கும் தொலைதூரம்! அரிமான் காங்கேயன் துறைக்குச் செல்வதாகத்தான் பாவித்துப் புறப்பட்டான். ஆனால் அருகிலுள்ள புத்தத் துறையில் பதுங்கியிருக்கிறான். தெரிந்து கொள், இப்போது பிகுச் செய்யாதே! அதிகனை வெல்லுகிற ஆணழகனிடம் உன் அழகை ஒப்படைக்க மறுக்காதே!” என்றான்.
பேச்சில் சிக்கித் தெம்பாங்கு அவன் கைப்பட்டு விட்டாள். அவன் அவள் மெல்லுடலைத் தன் உடலுடன் அணைத்து ஆவலுடன் அழுத்தத் தொடங்கினன். இணங்குவது போலப் பாவித்து அவள் சட்டென்று மீண்டும் நழுவியோடினாள்.
66
“அதிகன் வீரம் உங்களிடம் சிக்கும் போது, என் அழகு எங்கே போய்விடப் போகிறது! அதன் பின் நானாக வருகிறேன். ஆனால், நினைவில் இருக்கட்டும். பழைய இலங்கையரசன் ஒருவன் மகுடத்திலிருந்து எடுத்த மணி ஒன்றை அதிகன் முடியில் அணிந்திருக்கிறான்! பாண்டியன் அவனுக்கு அளித்த பரிசாம் அது! அதிகனைப் பிடிப்பது உண்மையானால். அந்த மணியைக் கைப்பற்றி எனக்குக் கொடுங்கள். அதன் பின் நான் உங்கள் விஷயத்துக்குத் தடை கூறப் போவதில்லை” என்று கூறிவிட்டு வெளியேறினாள் தெம்பாங்கு!
அவள் ஒரு சிங்கள உயர்குடி நங்கை. இளமையிலேயே அவள் தாயை இழந்தவள். தாய்போல அவளைப் பேணிய