பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

[219

பாண்டியர் கடற்படைப்

தந்தையும் பிற உறவினரும் போர்களிலேயே வீரமரணமடைந்தனர். இதனால் அவள் துணையற்றவளானாள். துணையற்றவர்களுக்குரிய உதவி நாடியே அவள் பொலந்தரரிடம் வந்திருந்தாள். ஆனால் அவள் அழகும் ஆடல் பாடல் நயங்களும் கண்ட கோட்டைக் காவலன் அவள் நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். உதவி புரிவதாக வாக்களித்து நாள் கடத்திக் கொண்டே, அவளைத் தன் வலையில் சிக்கவைக்க எண்ணினான். இதையறிந்ததும் வேறு வழியில்லாமல் தெம்பாங்கு வேண்டா வெறுப்புடன் அவன் ஆதரவிலேயே நாள் கழித்து வந்தாள்.

துணையற்ற அந்நிலையிலே காதல் அவள் வாழ்வில் புகுந்தது. அது அவளை அரசியல் சூழ்ச்சிகளின் மாயச் சுழல்களில் மெல்ல மெல்லச் சிக்கவைத்தது. ஏனெனில் அவள் காதலைப் பெற்று அதில் இழைந்த இளைஞன் இலங்கை வாணன் அல்ல; பாண்டிநாட்டவன். அவன் பாண்டியர் படைத்தலைவன் இளமாறன்.

பாண்டி நாட்டு ஒற்றர்கள் இச்சமயம் இலங்கையில் ஈசல்கள் போல் எங்கும் பறந்தனர்-எறும்புகள் போல எங்கும் புகுந்து திரிந்தனர். அவர்களுடன் கலந்து படைத்தலைவன் அதிகனுக்கு வேண்டிய உளவறிந்து செல்லவே இளமாறன் புத்தளத்துக்கு வந்திருந்தான். தெம்பாங்கு அவனைக் காதலித்தது போலவே அவனும் அவளை உயிர்ப் பாசத்துடன் காதலித்தான். அவளுடன் பேசி மகிழ, மறைவில் முத்தங்கள் பரிமாற கிடைத்த தறுவாய்களில் தனியிடம் கண்டு தம்மை மறந்து கலந்தின்புறு வதற்காகவே அவன் தன் கடமைகளை வேண்டுமளவு தளர்த்தி நாட்கடத்தி வந்தான். அவளும் அவன் பகை நாட்டன் என்பது தெரிந்தும், அரசியல் நேர்மைக்கும் காதல் பாசத்திற்கும் இடையே வாள்முனை மீது நடந்து திரிந்தாள்.

"போர் எப்படி முடியுமோ சொல்ல முடியாது. ஆனால் அது முடிந்தபின் இங்கே, பாண்டி நாட்டி லோ இருவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். அதுவரை இந்த ஒளிவுமறைவுக் காதலல்லாமல் நமக்கு வேறு வழியில்லை-உன்னைப் போல் நானும் இந்த இரண்டக நிலையில்தான் காரியமாற்ற வேண்டும்?" என்று அவன் தன் காதலியிடம் கூறியிருந்தான்.