(222
அப்பாத்துரையம் - 28
பாண்டியர் ஒற்றர் படைத் தலைவன்
கடம்பன்
இளமாறனின் நண்பன். அவன் அச்சமயம் புத்தளத்திலேயே மறைந்து உலவினான். அவனை இளமாறன் தேடிக் கண்டுபிடிக்க எண்ணிக் கோட்டை வீதிப் பக்கம் சென்றான். ஆனால் எதிர்பாராத வகையில் அவனே எதிர்ப்பட்டான்.
இளமாறனை அவன் மாறன் என்றே அழைப்பது வழக்கம். "மாறா! நீ என்ன ஒரேடியாக மாரன் விளையாட்டி லேயே இறங்கி விட்டாயா? ஒற்றர்படை அலுவலத்துக்கு உன் செய்தி எதுவுமே எட்டவில்லையே!” என்றான்.
வேடிக்கையாக அவன் கேட்ட கேள்வி இளமாறன் உள்ளத் தில் தைத்தது. தன் காதல் கதையைத் தெரிந்துதான் அவன் பேசு கிறானோ என்று ஒரு கணம் எண்ணினான். ஆனால் அடுத்த கணம் அவன் தன் காதற் கதை முழுவதையுமே தானாக நண்பனுக்கு எடுத்துரைத்தான். அதுகேட்டு கடம்பன் காரி ஏளனப் புன்முறுவல் பூத்தபோது, அக்காதலி மூலமே தனக்குக் கிடைத்த அரிய இரகசியத்தை அவனிடம் சொன்னான்.
66
'அன்பனே! இச்செய்தி முக்கியமானது; அவசரமானது. காதலில் இழைந்து தன் வயமற்ற என்னைவிட, இதை உடனடியாகத் தலைவரிடம் கொண்டு செல்லத் தக்கவன் நீயே! இப்போதே விரைவாயாக!” என்றான் இளமாறன்.
66
நீ ?”
"நான் இன்று வரவில்லை. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன."
என்ன வேலை என்று கடம்பன் காரி கேட்கவில்லை. நண்பன் நிலையை அவன் குறிப்பால் அறிந்தான். ஆயினும் அவனால் ஒரே ஒரு எச்சரிக்கை தராமலிருக்க முடியவில்லை.
"காதல் இனிதுதான். ஆனால் அதற்கு ஒரு நேரம் உண்டு. இடம் உண்டு.வரம்பும் உண்டு. இந்த மூன்றும் கெட்ட நேரம் இது. உன் காதலி நம் பகைவர் பாசறைக்குரியவள்- தமிழ் நங்கை கூட அல்ல; சிங்கள நங்கை. அவள் காதல் ஒரு வேளை பகைவர் வீசும் வலையாய் இருந்துவிடக்கூடாது; விழிப்பாயிரு" என்றான்.