பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

[223

"தெம்பாங்கை உனக்குத் தெரியாது; தெரிந்தால் உன் அச்சத்துக்கு இடமேயிராது. அவள் சிங்கள நங்கையாய் இருக்கலாம். ஆனால் அவள் உள்ளம் அப்பழுக்கற்ற காதலில் திளைக்கும் பெண்மை உள்ளம். அக அழகு மொழி கடந்தது. னம் கடந்தது...'

>>

“சரி, சரி, நான் இதோ, புறப்பட்டு விட்டேன். பேசிக் கழிக்க இப்போது நேரமில்லை!”

கடம்பன்காரி பேசிக்கொண்டே கோட்டையின் கடற் புறமதில் மீது பரபரவென்று ஏறினான். அவ்விடத்தில் காவல் மிகுதியில்லை. ஏனெனில் அப்பக்கம் செங்குத்தான மதில் நேராகக் கொந்தளிக்கும் ஆழ்கடலின் மீது உயர எழுந்து நிமிர்ந்து நின்றது. சாவுக்கஞ்சாத வீரரும் அவ்விடத்தை அணுக அஞ்சுவர். ஆனால் சாவுடனே விளையாடிப் பழகிய மரபுக்குரியவன் கடம்பன்காரி. அவன்கண்ணை மூடிக்கொண்டு பாறை வழி சறுக்கினான். அலையுடன் அலையாகக் கொந்தளிக்கும் கடலில் மிகுந்த ஒரு மிதப்புக்கட்டை அவனை அலையில் விழாமல் தடுத்தாண்டது. அம்மிதப்புக் கட்டை உண்மையில் புறத்தே கட்டைபோல் தோன்றும்படி குடைவாக செய்த ஒரு மாயப் படகே. அது கடம்பன் காரி நுழைந்தும் அலைக் கிழித்துத் திறந்த கடலில் பாய்ந்தது.

இளமாறன் சிறிது நேரம் படகை நோக்கிய வண்ணமே மதில் மீது நின்றான். பின் கோட்டை மதிலிலிருந்து இறங்கி நகரினுள்ளே திரிந்தான். இரவில் தெம்பாங்கை முன் இரவு சந்தித்த தோப்பை அவன் அணுகினான். தெம்பாங்கு அவனுக்கு முன்னே அங்கே வந்து காத்திருந்தாள்.

நள்ளிரவுப் போதில் காதலரிருவரும் ஒருவரை ஒருவர் பின்னிக் கொண்டு சருகுப் படுக்கையில் கிடந்தனர். உடைகள் பெரும்பகுதியும் நெகிழ்ந்து கிடந்ததைக் கூட உணராமல் அவர்கள் அயர்ந்து இன்பத்துயிலில் ஆழ்ந்திருந்தனர். அச்சமயம் இரண்டு பந்தங்களின் ஒளி அவர்கள் முகத்தில் பாய்ந்தது. அவற்றின் வெப்பம் கன்னங்களில் உறைத்தது. காதலர் கலவரத் துடன் திடுக்கிட்டெழுந்து, அரைத் துயிலில் கலங்கிய கண் களுடன் சுற்று முற்றும் பார்த்தனர். முரட்டுச் சிங்கள வீரர் அவர்களைச் சுற்றிலும் திரண்டு நின்றனர். அவர்கள்