(224
||–
அப்பாத்துரையம் - 28
பின்னணியில் துடிதுடிக்கும் மீசையுடன் பொலந்தாரே வந்து சீறி நின்றான்.
தன் காதல் வாழ்வும் மறைவிடமும் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? அது தெரிந்தாலும் இப்படி நள்ளிரவில் வந்து தாக்கும் படியாக தான் செய்த குற்றம் என்ன? இக் கேள்விகளுக்கு விடை காணாமல் இளமாறன் உள்ளம் தத்தளித்தது. ஆனால் வீரரின் பேச்சுக்களும் நடைமுறைகளும் விரைவில் யாவற்றையும் விளக்கின.
பொலந்தரர் பேசினான். உணர்ச்சி வேகத்தால் அவன் உடல் துடித்தாடிற்று.
66
'அடே, பாண்டி நாட்டுப் பதரே! என்ன துணிச்சலடா உனக்கு! இலங்கை நாட்டுக் கோட்டைக்குள் நுழைந்து வாழ் வதும் போதாமல், கோட்டைக் காவலன் பாதுகாப்பிலிருக்கும் சிங்கள நங்கையின் இதயத்தையும் களவாடப் புறப்பட்டு விட்டாய்! பார். உனக்கும் உன்னிடம் பசப்பிய அந்தச் சிறுக்கிக்கும் என்ன தண் டனை அளிக்கிறேனென்று?" என்று அவன் இளமாறனை நோக்கிக் கூறினான். பின் மற்ற வீரரை நோக்கிக் கட்டளையிட்டான்.
"போங்கள், இவனைக் கட்டிக் கொண்டுபோய் பாதாள அறையில் அடையுங்கள். அவன் கொட்டம் அடங்கத் தண்டனை தருவோம். ஆம், அந்த மாயக் கள்ளியையும் வேறொரு திசையில் அடைப்பீர்” என்றான்.
தெம்பாங்கு இச்சமயம் வீரருள் ஒருவனைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள். அவன் அவளுக்கு வணக்கம் செய்து விட்டு, பொலந்தரரை நோக்கிப் பணிவுடன் கூறினான்.
66
"ஆண்டே, தங்களுக்கு இவள் பெருங்குற்றம் இழைத்திருக் கலாம். ஆனால் நாட்டுக்கு அவள் செய்த நலம் சிறிதன்று. அதிகன் அஞ்சி பிடிபட இருக்கிறான். அவனுக்கு முன்னால் அவனுக்கடுத்த படியான படைத் தலைவனையே அவள் கைப்பற்ற உதவி யிருக்கிறாள். ஆகவே அவளை மன்னிக்கக் கோருகிறேன்,” என்றான்.
இளமாறனுக்குத் தான் பிடிப்பட்டதைவிட இம்மாற்றம்