பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

225

பேரிடியாயிற்று. “ஆ! என் தெம்பாங்கா என்னைக் காட்டிக் கொடுத்தது?” என்று பற்களைக் கடித்தான்.

அவன் ஏமாற்றத்தைத் தெம்பாங்கு உணர்ந்தாள்."அன்பரே, அவர் கூறியது முற்றிலும் உண்மையல்ல. அதை அப்படியே நம்பி விடாதேயுங்கள் என்று கூறி அவன் தோள்களைப் பற்ற முயன்றாள். ஆனால் இளமாறன் வெறுப்புடன் அவளைக் கையால் உதறித் தள்ளினான். ஒரு கணத்துக்கு முன் அவளை ஆவலுடன் அணைத்து மகிழ்ந்து அதே கரம் இப்போது இரும்புக் கரமாய் அவள் உடம்பில் தழும்பேற்றிற்று.

வீரர் அவளை ஒன்றும் செய்யாது விட்டனர். ஆனால் இளமாறன் கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துக் கொண்டு சென்றனர். நடுப்பகலில் கூட இருட்டாகவே இருக்கும் பாதாள அறையில் ஒரு தூணுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைத்தனர்.

பாண்டியர் வீரம் காதற் கட்டில் மயங்கிக் கண்ணிழந்து

இங்ஙனம் எதிரியின் பாசறையில் கட்டுண்டு கிடக்க நேரிட்ட தென்று இளமாறன் இரவெல்லாம் வருந்தினான். ஆயினும் தன் தலைவனுக்கு எதிரியின் மறைசெய்தி அறிந்து கூறிக் கடமை செய்து விட்டோம் என்ற மன நிறைவு அவனுக்கு ஓரளவு ஆறுதல் தந்தது.

மறுநாள் காலை பாதாள அறையின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே இன்னொருவன் கட்டுடன் தள்ளப்பட்டதை அவன் உணர்ந்தான். முதலில் அது யார் என்று அவன் கவனிக்கவில்லை. விளக்குடன் கட்டுண்டவன் பின்னால் இரு காவலர் வந்தனர். அவர்களுடன் தெம்பாங்கும் வந்தது காண, அவனுக்கு அவள் மீதிருந்த கோபம் இன்னும் பெரிதாயிற்று. அவளைக் கொன்று விடப் போகிறவன் போலப் பார்த்தான். அவள் மீது பாய்ந்து அவளைக் கட்டுண்ட நிலையில் உடலுக்குத் தான் வலி ஏற்பட்டது.தெம்பாங்கு அவன் நிலை கண்டு இரங்கியது போலத் தோன்றிற்று. ஆனால் அவள் உள்ளத்தின் ஆழத்தையோ போக்கையோ அவனால் உணர முடியவில்லை.

கட்டுண்டவன் மீது விளக்கொளி பட்டதும், இளமாறன் ‘ஆ' என்று அலறினான். “ஆ, கடம்பன்காரி! நீ எங்கே இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?” என்றான்.