பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226

||

66

அப்பாத்துரையம் - 28

'ஆம் கடம்பன்காரிதான்.நீ பிடிபட்டது கேட்டுத்தான் நான் திரும்பி ஓடிவந்தேன். எப்படியோ நானும் எளிதில் பிடிபட்டு விட்டேன். ஆனால் நீ அவளிடம் இன்னும் உயிரையே வைத்திருப் பாய் என்று நினைக்கிறேன்” என்றான்.

66

இந்த அழகிய நச்சுப் பாம்பைத்தானே குறிக்கிறாய்!' என்று இளமாறன் தெம்பாங்கைச் சுட்டிப் பேசினான். “அவளை நீ இப்போது எவ்வளவு திட்டினாலும் எனக்கு மனம் ஆறாது. அவள் என்னைக் காட்டிக்கொடுத்தாள். உன்னையும்...?"

அவன் பேசி முடியுமுன் தெம்பாங்கு குண்டுபட்ட பெண் புலிபோலச் சீறி அவன் மீது பாய்ந்தாள். தன் முழு ஆற்றலுடனும் சங்கிலியில் பிணைக்கப்பட்ட தன் கையாலேயே அவன் அவளை ஆவேசத்துடன் நெக்கி அப்பால் தள்ளினான். அவள் பாதாள அறையின் வாயில் பக்கமே சென்று விழுந்தாள். 'அட தமிழா உனக்கு அறிவுதான் மழுங்கிவிட்டது. கண்ணுமா தெரிய வில்லை?' என்று ஏதேதோ கூறிப் புலம்பியவாறு அவள் வெளியேறினாள். காவலரும் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு அகன்றனர்.

இளமாறன் முதலில் தெம்பாங்கின் புலம்பலைக் கவனிக்க வில்லை. ஆனால் இருட்டில் ஏதோ அருகில் மின்னுவதைக் கண்டான். காலை எட்டி அதைத் தன் பக்கமாக இழுத்துப் பார்த்தான். அது ஒரு திண்ணிய உடைவாள்! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை- தன்னைக் காட்டிக் கொடுத்த நங்கை இப்போது மீண்டும் நடிப்பு நடித்து இதைக் கொண்டு தந்து விட்டுப் போவா னேன்? ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை. முயற்சியுடன் அதைக்‘காலாலும் கையாலும் பற்றி எடுத்து இடையில் சொருகி மறைத்துக் கொண்டான்.

இப்புதிய கண்டுபிடிப்பை அவன் கடம்பன்காரியிடம் கூறவில்லை. ஆனால் அவன் மூளை விரைவாக வேலை செய்தது. அவன் அவ்வுடைவாளைப் பயன்படுத்தி வெளியேறத் திட்ட மிட்டான்.

மீண்டும் இரவாயிற்று.

வாயில் காவலன் ஒருவன் தவிர மற்ற காவல் வீரர் அனை