பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

(227

வரும் பாதாள அறையின் வாயிலிருந்து அப்பால் சென்றனர். அவர்கள் விடை பெற்றுக் கொண்டிருந்ததை அவன் கூரிய செவிகள் அவனுக்கு உணர்த்தின.

முன்னிரவு கழிந்தது. வாயில் காவலன் உறக்கத்தைப் போக்கும் எண்ணத்துடன் வாயிலின் குறுக்கே அங்குமிங்கும் நடந்தான். இடையிடையே அடங்கிய குரலில் எதோ சிங்களப் பாட்டைப் பாடினான். அவன் கண்களையும் நாடி நரம்பு களையும் தாக்கிய உறக்கத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இளமாறன் மெல்லக் கடம்பன்காரியைக் காலால் தடவி எழுப்பினான்.

"காரி! நீ உறங்குகிறாய்; நான் விழித்துக் கவலையுடன் திட்டமிட்டு வருகிறேன். இப்பொழுது செயல் செய்யும் நேரம். எழுந்திரு!” என்றான்.

"நள்ளிரவு, விலங்கு, பாதாள அறை இவற்றிடையே என்ன இருக்கிறது, செயல் செய்ய?" என்றான் காரி.

66

அது பற்றி உனக்குக் கவலை வேண்டாம், தெரிகிறதா!” கடம்பன்காரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் சொல்கிற படி செய்வதாக வாக்களித்தான்.

“வாயில் காவலர்களை இச்சமயம் எப்படியாவது உள்ளே வரச் செய்ய வேண்டும். அதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். இன்னும் கால் நாழிகை நேரத்துக்குள் நான் மெல்ல ஒன்று, இரண்டு, மூன்று என்பேன். மூன்று என்றவுடன் நீ திடுமென வலி கண்டவன் போலச் சங்கிலியுடன் போராடிக் கொண்டு தரையில் உழல வேண்டும். வாயில் காவலன் அது கேட்டு உள்ளே வரும்வரை நீ இதை இடைவிடாது நடிக்க வேண்டும்” என்றான்.

கடம்பன்காரி அந்தக் கால்நாழிகை நேரமும் மலைப்புடன் ஆனால் ஆவலுடன் காத்திருந்தான்.

இளமாறன் தன் கிழிந்த சட்டையை மேலும் கிழித்தான். கிழந்த தும்புகளைப் பல்லில் கடித்து முறுக்கினான். உடை வாளை வலது காலடியில் வைத்து அத்தும்புகளால் இறுக்கிக் கொண்டிருந்தது.