(228
அப்பாத்துரையம் - 28
கால் நாழிகையானதும் அவன் மெல்ல ‘ஒன்று- இரண்டு- மூன்று' என்றான்.
கடம்பன்காரி அவன் நடிப்பைத் தொடங்கினான்.
சங்கிலி கலகலத்தது. காரியின் கதறல் வாயில் காவலனுக்குக் கேட்டும் அளவில் எழுந்தது. சங்கிலியுடன் கைகால்கள் நிலத்தில் உராயும் அரவம் பாதாள அறை எங்குமே எதிரொலித்தது.
இளமாறனும் இதற்கிடையே “ஐயோ இது என்ன காரி! காக்காய் வலியோ குதிரைவலியோ என்னவோ? இனி என்ன செய்வேன்?” என்று கத்தினான்.
தண்டனைக்குரிய குற்றவாளி வலியால் இறந்து விடக் கூடாதே என்று கருதி, வாயில்காவலன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவனிடம் விளக்கு இல்லை. ஆகவே விழுந்து புரள்பவனைத் தடவி எடுத்து நிறுத்துவதற்காக அவன் கீழே குனிந்தான். செவிகளைக் கூராக்கிக் கொண்டு
ளமாறன் இத்தனை யையும் உன்னிப்பாகக் கவனித்தான். அவன் கீழே குனிந்திருந்த தன் காலை எட்டி நீட்டித் தன் முழுவலுவுடன் அவன் அடிவயிற்றில் உதைத்தான். காலில் கட்டியிருந்த உடைவாள் அவ்வடி வயிற்றைத் துளைத்தது. உடனே குடல் பீறிட்டு வெளிவந்தது. வாயில் காவலன் பிணமானான்.
முன் உடைவாளைத் தன் பக்கம் இழுத்தது போலவே இளமாறன் இப்போது வாயில்காவலன் பிணத்தைத் தன் பக்கமாக இழுத்தான். அவன் இடையில் தொங்கிய சாவிக் கொத்தையும் அவன் வாளையும் எடுத்துக் கொண்டான். சாவிகளால் தன் விலங்கையும் கடம்பன் காரியின் விலங்கையும் அகற்றிய பின், உடைவாளைத் தானும் வாளைக் கடம்பன்காரியும் தாங்கிய வண்ணம் இருவரும் பாதாள அறையை விட்டு வெளியேறினர்.
வெளிவாயில் காவலரையும் இருவரும் சேர்த்து தாக்கி வீழ்த்தினர். அதன்பின் இருவரும் வேகமாக வெளிக் கோட்டை மதிலை நோக்கி நடந்தனர். ஆனால் இவ்வளவு பெரு முயற்சி யுடன் பெற்ற அவர்கள் விடுதலை நீடிக்கவில்லை. பாதாள அறையில் நடந்த போரின் அரவமோ, புறவாயில் காவலர் இட்ட