பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(230) ||

அப்பாத்துரையம் - 28

யிற்று. உங்களைச் சிக்க வைத்துவிட்டால், உங்களையும் மன்னித்து, எனக்கும் உங்களையே காதல் மணம் செய்து தந்துவிடுவதாகப் பசப்பினார்கள். அதை நம்பினேன். ஆனால் கிடைத்தது எனக்கு விடுதலை மட்டும்தான். நான் ஏமாந்தேன். இரண்டாவது தடவை நான் உதவியதன் காரணம் அதுவே. அது வெற்றிபெறவில்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன் எனக்காக அல்ல. நான் பெறும் தண்டனைக்கு நான் வருந்தவில்லை; மகிழ்கிறேன். என் மடமைக்கு நான் தண்டனை யனுபவிக்கிறேன். அத்துடன் இவ்வுலகின் ஏமாற்றங் களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நிலையாக விடுபடுகிறேன். ஆனால் என் காரணமாக என் மடமை காரணமாக நீங்களும் உங்கள் நண்பரும் அடையவிருக்கும் முடிவை எண்ணித் தான் இப்போது நான் தாங்கொணாத் துன்பமும் அனுபவிக்கிறேன்” என்றாள்.

ளமாறன் தான் அவளை முன் தாறுமாறாகப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தான். "வீரராகிய நாங்கள் இருவரும் மாள்வதில் தவறில்லை. உங்களை இதில் மாட்டி விட்டதற்காகவே வருந்து கிறோம்" என்று கூறி அவளைத் தன்னால் இயன்ற மட்டும் ஆற்ற எண்ணினான். ஆனால் அவள் ஆறுதல் எதுவும் விரும்பவில்லை. “என் பிழையை மன்னித்து என்னை இன்னும் முடிவுரை காதலிப் பதாகக் கூறுங்கள். என் துன்பத்தை இன்பமாக்கும் செய்தி அது ஒன்றுதான்" என்றாள்.

இளமாறன் மட்டுமல்ல; கடம்பன்காரியும் அவள் காதல் உறுதியைப் பாராட்டி அவள் முடிவுக்காகப் புலம்பினர்.

பொழுது விடிந்தது. அவர்கள் அடைபட்டிருந்த அறை சிறைக்கூடமல்ல. வதைக்கூடம் என்பதை அவர்கள் இப்போது தெளிவாகக் கண்டனர். மனிதரைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்யும் எண்ணற்ற கருவிகள். பொறிகள், இயந்திரப் பகுதிகள் எங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றின் சாட்சியே அவர்களுக்கு ஒரு மிகப் பெருந் தண்டனையாயிற்று.

மாலையில் கதவு திறக்கப்பட்டது. சாவின் தூதுவரை ஒத்த முரடர்கள் மூவர் உட்புகுந்தனர்.