கன்னியின் சோதனை
66
(231
“அழகிய நச்சுப்பாம்பே! உன் காதலன் கண் காண, அவன் நண்பன் முன்னிலையிலேயே, நீ முதல் பலியாகப் போகிறாய். அவர்கள் முதலில் இதைப் பார்க்கட்டும்” என்றான்.
அவள் கண்கள் இமையாடவில்லை. உடல் அசையவில்லை. சாவை வரவேற்கும் வீர வனிதையாகவே அவள் நின்றாள். ஆனால் அவர்கள் முதல் செயலே அவள் எதிர்பாராத பிணித்திருந்த சங்கிலியை அவிழ்த்து அவள் கைகள் இரண்டை யும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவள் கால்களை அவன் இரும்புக் கரங்கள் மிதித்து அழுத்திக் கொண்டன. அந்நிலையில் மற்ற இருவரும் அவள் ஆடை, உள்ளாடைகளைக் கிழித்தெடுத்துத் தீயிலிட்டனர். அந்த அழகுப் பிழம்பின் ஒவ்வொரு அணுவும் தாங்க முடியாத அவமானத்தாலும் வெட்கத்தாலும் செத்து மடிந்தது.
அவர்கள் முன் வதைப்புக் கருவிகளிடையே ஒரு விசித்திர அழகுப் பொருளாக ஒரு இரும்புப் பாவை வடிவம் இருந்தது. தெம்பாங்கின் அழகுடன் கூடப் போட்டியிடத் தக்க வாய்ப்பு டையதாக இருந்தது. முரடர் அதனருகிலுள்ள ஒரு குமிழை அழுத்தியதும், அது இருபாதியாக மெல்ல விலகிற்று. இரு பாதிகளின் உட்புறமும் ஒரு மனிதனை மூடி வைக்கத்தக்க அளவில் உட் குடைவாயிருந்தது. உட்பகுதி முதலில் இந்த அளவே கோரக் காட்சி அளித்தது. ஆனால் அதன் முழுக் கொடூரமும் குற்றவாளிகளுக்குத் தெரியும்படி முரடர் காட்டினர். ஒரு குமிழை அழுத்தியதும் உட்பகுதி முழுவதிலும் குண்டூசிகள் போன்ற கூரிய ஊசிகள் நிரம்பின. மற்றொரு குமிழை அழுத்தியதும் இன்னும் கூரிய நீண்ட ஊசிகளும், மூன்றாவது குமிழ் அழுத்தப்பட்டபின் சுழலும் திருகாணிகளும் வெளிவந்தன. இவற்றைக் கண்டு சிறைப்பட்டவர் மூவரும் துணுக்குற்றனர். ஆனால் தெம்பாங்கு எதுவும் பேசவில்லை. நாணமும் அடக்கமும் கூட அவளை விட்டகன்றது போலத் தோன்றிற்று.
ரு
தெம்பாங்கின் கோரத் தண்டனையின் முதல் பகுதி தொடங்கிற்று. இரும்புப் பாவையின் விலகிய பிளவுகளுக்கிடையே அவர்கள் அவளைக் கொண்டு திணித்தனர். அடுத்த கணமே அவள் அசைய முடியாதபடி ஊசிகள் நாற்புறமிருந்தும் அவள் அழகிய உடலைச் சென்று