பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 28

ஆசீவகவாதம் என்ற பெயர் தேவார காலங்களில் அறியப் படாவிட்டாலும், அதற்கு மிகவும் பிந்திய நூலாகிய சிவ ஞான சித்தியாரில் இடம்பெற்றிருக்கிறது. இது நாம் மேலே குறிப்பிட்ட முடிவுக்கு மாறுபட்டதுபோல் தோன்றுவது இயல்பே. ஆனால் நீலகேசியாலும், பிற நூலாராய்ச்சியாலும், ஆசீவக சமயத்தைப் பற்றி நாம் அறிந்த செய்திகளுடன் சிவஞான சித்தியாரில் கண்ட செய்திகளை ஒப்பிட்டு நோக்கினால், சிவஞானசித்தியார் ஆசீவகவாதம் என்ற பெயரைக் குறிக்கின் றாரேயன்றி அதனை நேரடியாக அறிந்து விளக்க வில்லை என்று காணலாம்.

ஆசீவகர் நெறி, மேற்போக்கான பண்புகளின் சில வற்றில் சமணரிடையே திகம்பரர் நெறியை ஒத்தது. ருசாராருடையேயும் துறவிகள் ஆடையை வெறுத்தனர். க்காரணத்தால் இருவரையும் ஒன்று சேர சமணர் எனக் குறிப்பதுண்டு. இவ்வெளி ஒற்றுமையையும் கண்டு, சிவ ஞானசித்தியார் அவை இரண்டும் ஒரே நெறியின் இரண்டு உட்கிளைகள் என மயங்கினர். அது மட்டுமோ? இரண்டினையும் பற்றிக் கூறும் செய்திகள் சிறிதும் ஒன்றுக்கொன்று வேறுபடாது ஒரேபொருளின் இருவகை விரிவுரையாகவே அமைந்துள்ளன.

இதிலிருந்து சித்தியார் ஆசிரியர், பிறிதொரு நூலி லிருந்து இப்பெயரைக் கேள்வியுற்று மேலீடாக ஒன்று படுத்திக் குழப்பினரே யன்றி, அச்சமயம் பற்றி நேரிடையாக எதுவும் அறிந்தவரல்லர் என்று ஏற்படுகிறது. ஆயினும் தென்னாட்டில், தேவார காலத்துக்கு முன்பே (கி.பி.7 ம் நூற்றாண்டுக்கு முன்பே) இறந்துபட்ட இவ் ஆசீவகநெறி, வடநாட்டில் பின்னும் சிலகாலம் இருந்ததெனக் கூறலாம். ஆசீவக நெறியைத் தோற்றுவித்த தலைவர் மஸ்கரி என்பவர், ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாணரின் ஹர்ஷ சரிதத்தில் பிறசமய வகுப்பினருடனே மஸ்கரி வகுப்பினரைப் பற்றிய செய்தியும் கூறப்படுகிறது. நீலகேசி இங்ஙனம் ஆசீவக மதம் தமிழகத்தில் தழைத்திருந்த காலத்திய நூல் ஆகும். எனவே, அது ஏழாம் நூற்றாண்டுக்கு முந்திய தாதல் வேண்டும்.

ஆசிரியர் காலத்தை வரையறை செய்ய உதவும் ன்னொரு செய்தி நீலகேசி 5 வது செய்யுளின் குறிப்பு ஆகும்.