பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

(233

ஆபத்து! உன் விலை மதிப்பற்ற இந்த இனிய சுமையை அப்படியே தாங்கிக் கொள், நாம் கடற்கரைக்கே இக்கணமே ஓடிவிட வேண்டும். நட விரைவில்!” என்றான்.

தூக்கும்போது தெம்பாங்கு வேதனையால் மெல்ல முனகினாள். ஆனால் அதைக் கவனிக்க அச்சமயம் இடமில்லை. நண்பன் பின்வர, தெம்பாங்கின் சுமையுடன் அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விரைந்தனர்.

கோட்டைப்புற மதில் அருகே சென்றபின் அவர்கள் சிறிது தயங்கினர். ஒரு நங்கையைச் சுமந்து கொண்டு நிலத்தில் செல்ல முடியும். அவளுடனே கடலில் குதித்து நீந்துவது எப்படி? அதுவும் செங்குத்தான மதிலில் அச்சுமையுடன் சறுக்கி அதனடியிலுள்ள கொந்தளிக்கும் அலைகளையும், சுழல்களையும் கடப்பது எவ்வாறு? இரு நண்பர்களும் இது பற்றிக் குசுகுசுவென்று பேசினர்.

மெல்ல

அவர்கள் பேச்சு அரையுணர்வில் இருந்த தெம்பாங்கை முழு உணர்வுக்குக் கொண்டுவந்தது. அவன் போர்வையை விலக்கிக் கொண்டு பேசினாள்; "இன்னும் நீடித்துத் தயங்க வேண்டாம். நீங்கள் சறுக்குமிடம் சறுக்கி, நீந்துமிடமும் நானே நீந்திடுவேன்; ஆகட்டும்!" என்றாள்.

66

'அப்படியானால் நீயே முதலில் இறங்கு மாறா! தெம்பாங்கை இறக்கி விட்டுவிட்டு நான் பின்னால் பாதுகாப்பாக வருகிறேன்!” என்றான் கடம்பன்காரி.

அவன் வியப்படையும்படியாக, தெம்பாங்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு 'ஊகூம்' என்று தலையாட்டிமறுத்தாள். இளமாறன் மெல்லச் சிரித்தான்.

66

நண்பனே! உனக்கு வீரம் புதிதல்ல; பெண்கள் செய்திபுதிது தானே! உன் முன்னே தெம்பாங்கு ஆடை யெறிந்துவிட்டு நீரில் இறங்க முடியுமா?" என்றான்.

கடம்பன்காரி வெட்கமடைந்தான். ஆனால் உள்ளூரச் சிரித்துக் கொண்டான். இரும்புப் பாவையின் கோரக் காட்சி அவன் கண்முன் நின்றது. ஆனால் அவன் ஒன்றும் பேசவில்லை. “நீ திரும்பிக் கொள், தெம்பாங்கு” என்று கூறினான்.