பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(234) || __

அப்பாத்துரையம் - 28

அவள் திரும்பியதும் அவன் கொஞ்சமும் பயமேது மின்றி சரேலென்று மதிலிலிருந்து சறுக்கினான். அடுத்த கணம் அலை களினூடே அவன் தலை எழுந்தெழுந்து முன்னேறியது.

இளமாறன் மெல்லத் தெம்பாங்கின் போர்வையை அகற் றினான். மெல்லிய மேலாடையை மட்டும் மார்பையும் உடலையும் சுற்றி அவள் வரிந்து கட்டிக் கொண்டாள்.

66

"இருவரும் ஒன்றாகச் சறுக்குவோமா?" என்றான்.

"வேண்டாம். நீங்கள் பின்னால் வாருங்கள்!” என்று கூறி அவள் அம்புபோல் பாய்ந்தாள். அவளையடுத்து இளமாறன் பாய்ந்தான். காதலின் உள்ளார்ந்த ஆற்றலால் அவர்கள் நீந்தினர்.

ஒத்து

பாண்டியர் படகுகள் அடிக்கடி அப்பக்கம் அலைந்து கொண்டுதான் இருந்தன. அவற்றுள் ஒன்றைக் கண்டதும் கடம்பன் காரி அதைப் பற்றி ஏறினான். படகிலிருந்த ஒருவரின் மேலா டையை எடுத்துப் பின்வரும் காதலரிடம் வீசினான். நீரிலேயே அந்த ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு தெம்பாங்கு படகில் ஏறினான். இளமாறனும் அவள் ஏற உதவி செய்து தானும் ஏறினான்.

படகோட்டிகள் தம் பொறுப்பறிந்து காற்று வேகத்தில்

படகோட்டினர்.

பாண்டியர் கப்பற்படையின் வேவு கலம் ஒன்று அவர்களை பாண்டியர் கடற்படைத் தளத்துக்கே இட்டுச் சென்றது. சிங்கள நங்கையின் வீரக் கதை பாண்டிய நாட்டவர் உள்ளங்களில் ஒரு புதிய தமிழ் வீரக் கதையாக உலவிற்று.