(236)
அப்பாத்துரையம் - 28
களும் எழுதி மாணவ மாணவியரிடையே பரப்பி விடுவதுண்டு. காதல் நாடகத்தில் ஈடுபட்ட பெண்டிர்முன் ஆண் வேடத்தில் தோன்றியும், அத்தகைய ஆடவர்களைப் போலக் கடிதங்கள் அனுப்பி அந்தப் பெண்களைக் கிண்டல் செய்வாள். ஆனால் அதன் பயனாகவே கல்லூரித் தலைவர் கோபத்துக்கும் ஆளாகி, அவள் தேர்வுக்கு முன்னே வீட்டுக்குத் திரும்ப நேர்ந்தது.
அவள் அழகின் கவர்ச்சியில் ஈடுபட்டு, அவள் திரும்பிய திசையிலெல்லாம் ஓடாத இளைஞர் இல்லை. ஆனால் எவரும் அவளைத் தம் வசப்படுத்த முடியாமல் திண்டாடினர். ஆயினும் அவள் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தபோது, அவளுக்காகவே கல்வியைத் துச்சமென்று உதறித் தள்ளிவிட்டு, வாலிகண்டபுரமே தாம் கண்ட இன்ப உலகமென்று கருதித் திரிந்த இளைஞர் மூவர் இருந்தனர். அவர்களில் ஒருவன் அவளைப் போலவே வாயாடி. அவன் பெயர் மருது. மற்றொருவன் மதுரை- அவன் வாய் பேசாமலே அவள் குறிப்பறிந்து நடந்து வந்தான். மூன்றாவது இளைஞன் செங்கோடன் என்பவன்- அவன் பெருஞ் செல் வத்துக்கு உரியவன். அவனுடன் உறவுகொள்ளப் பெண்களைப் பெற்ற செல்வத் தாய்தந்தையர் மிகப் பலர் காத்துக் கிடந்தனர். ஆனால் காயாம்பூவின் நிழலாக அவன் அவளை விட்டகலா மலும், அவளை முற்றிலும் அணுகாமலும், அவளைச் சுற்றி வட்ட மிட்டான்.
கல்லூரியிலும் சரி, வாலிகண்டபுரத்திலும் சரி, காயாம் பூவுக்குப் பெண்களிடம் போட்டி இருந்ததில்லை. ஆடவர்களை அவள் சிறிதும் சட்டை செய்ததில்லை. ஆனால் கல்லூரியை விட்டு வாலி கண்டபுரம் வந்தபின் அவள் நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவள் சென்றவிடமெல்லாம் அவளுக் குரிய மூவகை நிழல்களானமருது, மதுரை, செங்கோடன் ஆகிய மூவரும் சென்றனர். மருதுவின் வாய்த்துடுக்கும் கலகலப்பும் மதுரையின் இன்னமைதியும், செங்கே, ன்னமைதியும், செங்கோடனின் பணமும் அவளைச் சுற்றி ஒரு நடக்கும் கோட்டையாக அமைந்தன. அவள் விரும்பினாலும் வெறுத்தாலும் சிரித்தாலும் சினந்தாலும் இந்தக் கோட்டை அவனை விட்டு விலக மறத்தது.
66
என்னைச் சுற்றி இப்படி ஏன் ஓயாமல் வட்டமிடு கிறீர்கள்?” என்று காயாம்பூ அடிக்கடி அலுத்துக் கொள்