கன்னியின் சோதனை
(237
வதுண்டு. அச்சமயங்களில் செங்கோடன் முகத்தைப் பார்க்க அவளுக்கு இரக்கமாக இருக்கும். 'நான் வட்டமிடவில்லை. நேரே உன்னை யடையப் போகிறேன்' என்று கூறுவது போலிருந்தது அவன் குறும்புப் பார்வை.ஆனால் மருது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு கொடுத்து வாதமிடுவான். "நீ சாட்டையாக இருந்து சுழற்றிவிட்டால் பம்பரம் ஏன் சுழலாது; வட்டமிடாது; நீ பேசாமல் என்னைத் திருமணம் செய்துகொள். அதுதான் மற்ற இருவரிடமிருந்து தப்ப வழி!” என்பான்.
மதுரையும், செங்கோடனும் காயம்பூவிடத்தில் தான் வாய் பேசவில்லையே தவிர, தமக்குள்ளும் மருதுவுடனும் ஓயாது பூசலிடத் தயங்கவில்லை. “காம்பூ ஒரு வாயாடியை ஏற்கப் போவதில்லை. உன்னுடன் ஓயாது வாயாட அவளால் முடியாது. அவள் என்னிடம்தான் உண்மையில் காதல் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே நீங்கள் இருவரும் அவளை என்னிடமே விட்டுவிட்டுத் திருமண வாழ்த்துக்குத் தயாராயிருங்கள்” என்று மதுரை பேசினான்; செங்கோடன்
தை மறுத்துரைத்தான். “வாய்ப் பேச்சும் சோறு போடாது. காதலும் வயிறு நிரப்பாது. காயாம்பூவுக்கேற்ற இன்ப மாளிகையும், மற்றவைகளையும் நான்தான் அளிக்க முடியும். ஆகவே அவள் என்னைத் தான் மணக்கப் போகிறாள். நீங்கள் வயிறு நிரம்ப மணவிழாவில் உண்டு, வாய் நிறைய வாழ்த்தி விட்டுப் போகலாம். வேறு மனக்கோட்டை கட்டாதேயுங்கள்”
என்பான்.
மூன்று காதலரிடம் போட்டிப் பூசல்கள், வாத எதிர்வாதங்கள், மூன்று வகையான காதல் பூசனைகள்- சில சமயம் காயாம்பூவுக்கு நேரப் போக்காக அமையும். ஆனால் அவையே பல தடவை அவளுக்குத் தீராத் தொல்லையாகவும் இருந்தன. அவள் கைக் குட்டை கீழேவிழுந்து விட்டால், அது மண்ணில் மிதிபட்டு இருப்பதையும் பாராமல் சண்டையிட்டுக் கொள்வர். இறுதியில் மூவரில் ஒருவர் கையிலிருந்து அழுக் கடைந்து, தும்பு தும்பாகக் கிழிந்த உருவிலேயே கைக்குட்டை அவள் கைக்கு வந்து சேர நேரும். அவளுக்கு நீர் வேட்கை ஏற்படும்போது, மூவரும் சென்றுதான் கொண்டுவர வேண்டுமாம்! நான் தான் கொண்டுவந்து கொடுக்க வேண்டும்