பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(238

அப்பாத்துரையம் - 28

என்று ஒரே கிண்ணத்தைக் கைப்பற்ற மூவரும் போட்டியிடுவர். இறுதியில் அவள் கையில் வெறும் கிண்ணந்தான் வந்து சேரும். அதில் இருந்த நீர் முழுவதும் போட்டிப் பூசலுக் கிடையில் நிலத்திலும் மூவர் உடைகளிலும் சிந்திப் போய் விடும்.

காயாம்பூ மூன்று காதலர்களில் எவரிடமும் தனிப் பாசம் காட்டவில்லை, எவரையும் தனிப்படப் பகைக்கவும் இல்லை, இதனால் மூவர் போட்டிகளும் எந்நாளும் போட்டிகளாகவே இருந்தன. அவள் தோழியர்களுக்கு இந்நிலை என்றும் காசில்லாப் படக்காட்சி- நாடகக் காட்சியாய் அமைந்தது. எல்லோரையும் நையாண்டி செய்த அவளைத் தோழியர் நையாண்டி செய்யத் தொடங்கினர். “காயாம்பூ திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை, மூன்று காதலர்களுடன் என்றும் கன்னியாகவேதான் கழிக்கப் போகிறாள்,” என்று அவர்கள் எங்கும் புறங்கூறத் தொடங்கினார்கள். மூவரில் ஒருவரும் அவளை விட்டுவேறு பெண்ணை நாடவில்லை யாதலினால் அந்தப் பேச்சையெல்லாம் நம்பினார்கள். 'மூன்று காதலர்களைக் கொண்ட வாடாத கன்னி மலர்' என்ற தொடர் காயாம்பூவின் வாழ்வை எட்டிக் கொண்டது. அவள் எவ்வளவு உதறித்தள்ள முயன்றாலும், அது அவளை விட்டு விலக மறுத்தது.

"உங்கள் மூவரில் எவரையும் நான் மணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இப்படி என்னைச் சுற்றி அலைய வேண் டாம்!” என்று அவள் ஒருநாள் மூவரையும் பார்த்துச் சீறினாள்.

"அப்படியானால் நீ யாரை மணம் செய்யப் போகிறாய்?" என்று கேட்டான் மருது.

66

'அது என் பிரியம் உனக்கு அதுபற்றி என்ன கவலை?' என்று சாடினாள் காயாம்பூ.

“என்னைத் தவிர வேறு யாருக்கு அதுபற்றிய கவலைக்கு உரிமை உண்டு. வேறு எவன் உன்னை அணுகினாலும், மூவரும் பொங்கி, போட்டியை நிறுத்திக் கொண்டு அவனைக் கொன் றொழித்து விடுவோம்" என்றான் மருது.