பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240 ||-

அப்பாத்துரையம் - 28

காதலர் மூவரும் அந்த வாசகத்தை அவள் முன்னும், தம்மிடையேயும் அதைத் திரும்பத் திரும்பக் கூறி மகிழத் தயங்க வில்லை. ஊரார் அனைவரும் அதைக் கொண்டு அவளையும் நம்மையும் நையாண்டி செய்தபோது கூட அவர்கள் ஒரு சிறிதும் அதில் மகிழ்ச்சி ஒரு நுட்பம் அவர்களுக்கு நகைச்சுவையையும் இன்பத்தையும் தராதிருக்க முடியவில்லை.

அவர்கள் மூவருள் ஒவ்வொருவரையும் அவள் வெறுக் காது ஏற்கச் சித்தமாயிருந்தாள்- எல்லோரும் இதை எண்ணி எண்ணியே வாசகத்தின் கோர முடிவை மறந்திருந்தனர்.

6

மூவரையும் அவள் ஓரளவு விரும்ப முடிந்தது- இதுதான் அவர்கள் பெற்ற நகைச்சுவையின் மர்மம்.

அவர்கள் நகைச்சுவை அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க வில்லை. அதே சமயம் அவர்கள் மகிழ்ச்சி கொடுக்கவில்லை. அதே சமயம் அவர்கள் மகிழ்ச்சியையும் அந்த நகைச்சுவை கெடுக்கவில்லை.

'மூவரில் யார் முதல் காதலராயிருப்பது?

மூவர் உள்ளங்களும் இக்கேள்வியிலும் அதற்கு விடை காண்பதிலும் முனைந்தன.

"மூவரில் யார் முந்திக் கொள்ளக் கூடும்?”

அவள் உள்ளமும் முதல் தடவையாக, சிறிது கவலை யுடன், இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டது. ஏனெனில் மூவரில் யார் வேண்டாம் என்று துணிவதுதான் அவளுக்குச் சிரமாயிருந்ததே தவிர, யார் வேண்டும் என்று துணிவது அவ்வளவு சிரமமாய் இல்லை.

அவள் மதுரையிடம் உண்மைக் காதலைக் கண்டாள். அவள் அறிந்தோ, அறியாமலோ அவள் உள்ளம் அவனைத்தான் நாடிற்று. ஆனால் உண்மைக் காதலன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க முடியும்- எவ்வளவு காத்திருந் தாலும் காதல் களிப்பு ஊறுகாய் சுவைபோல, மிகுதியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவன் முந்திக்கொள்ள மாட்டானா என்றும் விரும்பாமல் இருக்க முடியவில்லை.