(242) ||_
அப்பாத்துரையம் - 28
செங்கோடனை அவள் வேண்டா வெறுப்புடன் மணந்து கொண்டாள். வாலிகண்டபுரத்தார் கேலிகளுக்குத் தற்காலிக மாக ஒரு ஓய்வு ஏற்பட்டது- போட்டிக் காதலரிருவருள் மருது ஆயிரம் பணத்தையும் எண்ணிக்கொண்டே கேலி பேசத் தொடங்கியிருந்தான். “ஆயிரம் நாள் பிரிவு இருக்காது என்று எண்ணுகிறேன். அதற்கு ஆயிரம் வெள்ளி போதாது?” என்று சிறிது எக்களிப்புடனேயே பேசினான். அதே சமயம் மதுரை பெருமூச்சுடனும் ஏக்கத்துடனும் மூவாயிரம் வெள்ளியையும் அவற்றை மறதியில் மூழ்கடிக்கக் கூடிய குடியிலேயே செலவிட்டான்.
6
செங்கோடனை அவள் காதல் நெஞ்சுடன் சந்திக்க வில்லை. கடமைக்கு மட்டுமே உரியவனாக வரவிடுத்தாள். மணநாள் இரவே அவன் பணம் அவளுக்கு உரியதாயிற்று. அதுமுதலே அப்பணத்திற்குரியவன் மீது அவளது விருப்பு வெறுப்பாகி- கசப்பாக வளரலாயிற்று.
அவள் வாழ்வின் ஒவ்வொரு பகலும் ஓர் ஊழி- ஒவ்வோர் இரவும் ஒரு பேரூழி ஆயிற்று.
'இன்று கழிந்தது. இனி நாளையும் கழிய கேண்டுமா?'- இப்படி நாட்கள் கழிந்தன. எப்படியோ கடமையுணர்ச்சியும் மழுங்கிற்று. அவன் இன்பத்தை அவள் கருதவில்லை- அவன் கட்டளைகளைக் கூட மீறத் துணிந்தாள்.
யிற்று.
வாழ்க்கை அவளுக்கு மட்டுமல்ல; அவனுக்கும் கசப்பா
மங்கையைவிட மது அவனுக்கு மிகுந்த கவர்ச்சி தரத் தொடங்கிற்று. அவன் குடித்தான்; மேலும் மேலும் குடித்தான்.
அவள் அவன் செயலைத் தடுக்கவில்லை. அவன் குடித்து அழிவது நலம் என்று கருதி அதில் அவனை ஊக்கினாள்.
அவளை ஊர் தூற்றத் தொடங்கிற்று. அவள் பயப்பட வில்லை. கணவன் செங்கோடன் இறந்தான்- அவள் தன் அறி யாத்தனத்தால் ஏற்ற விலங்கு தளர்ந்ததென மகிழ்ந்தாள். மாதக் கணக்காகத் தனக்குக் கிடைத்த தண்டனைக்கீடாக, மதுரை தன் கைமை நிலைபற்றிக் கேட்டு, தன்னை வந்து காண்பானா என்றும் அவள் கவலை கொண்டாள்.