பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

9

இதில் ஆசிரியர் தாம் தம் சமயக் கோட்பாடுகளைத் ‘தேவரி’ டமிருந்து கற்றதாகவும், அவை தெய்வ வாக்குக் கொத்த மதிப்புடையவை (பிரமாணிகம்) என்றும் குறிப்பிடுகிறார். ஆசிரியர் தம் குரு எனக் குறிக்கும் இத்தேவர் யார்? தமிழ் இலக்கிய மரபில் வேறெவ்வகை அடையும் இல்லாது “தேவர்” திருவள்ளுவரானால், நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவரின் நேரடியான மாணவர் ஆக வேண்டும். அவர் சமய உண்மைகளைத் தேவரிடமிருந்தே கற்றனர் என்பதிலிருந்த, அவர் பிற சமய நெறியினின்று சமணநெறி புக்கவர் என்றும், அதற்கு உரிய ஆசிரியர் திருவள்ளுவர் என்றும் கொளல் தகும், 2 வது பாட்டில் இவ்வரலாறு பழமறை நூல் கண்டு எழுதியதன்று என்று அவர் தாமே கூறுவதும் இக்கோட்பாட்டை வலியுறுத்தும்.நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவர் மாணவர் என்று பெறப்படின் அவர் காலமும் கி. பி. முதல் நூற்றாண்டெனவே துணிதல் வேண்டும்.

நீலகேசி உரையாசிரியர்

நீலாசிரியரைப் பற்றி நாம் அறியக்கூடும் செய்திகளை விட உரையாசிரியரைப் பற்றி அறியப்படுபவை எவ்வளவோ மிகுதி. சிறப்புப்பாயிரச் செய்யுளிலேயே சமய திவாகர வாமனமுனி என்ற அவர் பெயர் தரப்படுகிறது. மேருமந்தர புராணத்தின் முன்னுரையில் அதன் ஆசிரியர் நீலகேசி உரை இயற்றிய வாமனாசாரியர் என்று கூறப்படுகிறது. இது தமிழ்ப் புலவர் வேறுபாடின்றி ஏற்கும் செய்தியாதலால், அதனை இத்துடன் விடுத்து அவர் வாழ்க்கைப்பற்றி அறியப்படும் சில செய்திகளை மட்டும் இங்கே குறிப்போம்.

இவர் வாமனாசாரியர் என்றும் மல்லி சேனாசாரியார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மாணவர் புஷ்ப சேனாசாரியார் அல்லது புஷ்ப சேனமுனி என்பவர். இவர் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரட்டையரள் பின்னவராய புக்கராயரிடம் படைத் தலைவராயிருந்த இருகப்பரின் ஆசிரியர் ஆவர். இருகப்பரும் அவர் தந்தை சைசப்பரும் விஜயநகரத்தை நிறுவியவருள் முன்னவரான ஹரிஹர ராயரின் அமைச்சர்களா யிருந்தனர் என்று அறிஞர்(டாக்டர்) ஹல்ட்ஷ் கூறுகிறார்.