பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

ஆனால் அடுத்து வந்தவன் மதுரை அல்ல; மருது!

(243

கனி கிடைக்கவில்லை; காய்தான் கிடைத்திருக்கிறது அவள் கனிக்காக சிறிது காத்திருக்க, சாக்குப் போக்குக் கூற எண்ணினாள். ஆனால் மருது என்ன நினைப்பானோ என அஞ்சி, கனி கைவராத நிலையில் அவள் அவனை ஏற்றாள். அவள் தனக்குத்தானே ஓர் ஆறுதல் கூறிக் கொண்டாள்.

முதற் கணவன் இறந்த ஒரு மாதத்திலா மறுமணம்? இந்தப் பெண்ணுக்கு இதயமில்லையா- என்று கேட்டனர் மக்கள். இது பற்றி மருது கவலைப்படவில்லை. ஆனால் காயாம்பூ உள்ளத்தை து உறுத்தியது. அவளுக்கு இதயம் இருந்தது. இதை அவள் இப்போதுதான் நன்கு உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த இதயம் மாண்ட கணவனையோ தற்போதைய கணவனையோ நாடவில்லை. கண்காணாத மதுரையைப் பற்றியே அந்த இதயம் ஓயாது சிந்தித்துச் சிந்தித்து சீரழிந்தது.

வாயாடி மருது மணமானபின் வாயாடவில்லை. காதல் போட்டியில் சலிக்காத அவன் மணமான பின்தான் மங்கையின் உள்ளம் தன் திசையில் இல்லை என்பதை உணர்ந்தான். அவன் தன்னாலியன்ற மட்டும் அவளுக்கு ஆர்வம் ஊட்ட முனைந்தான். தன் பேச்சுத் திறனால் மட்டுமின்றி தன் அன்பு, தியாகம், காதல் திறன்- ஆகியவற்றையும் அப்பெண்ணரசியின் காலடியில் படைக்க முற்பட்டான். ஆனால் திரும்பிய பெண்ணுள்ளத்தின் கொட்டத்தை அடக்க யாரால் முடியும்! அவன் அன்பு அத்தனையும் அவள் அழுகையைப் பெருக்கிற்றே யன்றி அடக்கவில்லை. “நீ ஏன் முந்தி வந்தாய்? மதுரையை யல்லவா எதிர்பார்த்தேன்,” என்று அவள் கூறத் தயங்கவில்லை.

கன்னியாயிருந்த காயாம்பூ மருதுவைக் கண்டிருந்தாள். ஆனால் காதல் மணம், அவன் உள்ளத்தை முழுக்க முழுக்க ஒரு காதலன் உள்ளமாக, காதற் கணவன் உள்ளமாக மாற்றியிருந்தது. அந்த அளவுக்குக் காயாம்பூவின் போக்கு அவன் உள்ளத்தில் கொதிப்பையல்ல- கசப்பை ஊட்டிற்று.

“உன் மதுரை வரட்டும். நீ கூறியபடி செங்கோடன் முறை கழிந்தது. என் முறை கழிகிறது. அவன் வருகைக்குக் காத்திரு! நான் போகிறேன்,” என்று அவன் நள்ளிரவில் எழுந்து சென்றான்.