பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(244)

அப்பாத்துரையம் - 28

அவள் அதனைத் தடுக்கவில்லை; வாதாடவில்லை;

மதுரையைப் பற்றிய எண்ணம் அவள் உள்ளத்தைக் கலக்கி யிருந்தது. அவனைப் போகவிட்டு அவள் மறு திசையில் முகம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் ஊரெல்லாம் அல்லோக கல்லோலப்பட்டது. மருது ஒரு மரத்தடியில் தூக்கிட்டு மாண்டிருந்தான். ஊரார் அவனுக்காக அழுதனர்- அழுவதற்கு ஒரு தனிக் காரணமும் ருந்தது. அவன் மடியிலிருந்த முடங்கலின்படி தன்னி மிருந்த ஆயிரம் வெள்ளியை காயாம்பூவுக்கே அளித்துச் சென்றிருந்தான். தன் மனைவியின் நற்குணத்தைக்கூட அதில் புகழ்ந்திருந்தான்.

செங்கோடன் கொடுத்த பணம்- அதை அவன் செலவு செய்யவில்லை. அவளுக்கே எழுதி வைத்திருந்தான்.

தன் சாவுக்கு அவள் காரணமென்பதை அவன் முற்றிலும் மறைக்க முற்பட்டிருந்தான்.

அவன் அவள்மீது சாகும்போதும் கொண்டிருந்த காதல் பழைய வாயாடி மருதுவின் காதல் அல்ல; இதை மீண்டும் கைம்பெண்ணான காயாம்பூ அறிந்தாள்.

அவள் உள்ளம் என்றுமில்லா ஆர்வத்தில் பழைய கன்னி காயாம்பூ அறியாத துடிதுடிப்புடன் மதுரைக்காக ஏங்கிற்று. அவன் வருவான், வருவான் என்று காத்திருந்தாள்.

மதுரையின் காதல் மற்ற காதலர்களின் உணர்ச்சிகள் போன்ற தன்று. அது தொடக்கத்திலிருந்தே ஆழமானது. ஆனால் அவன் அதை வெளியிட்டுக் கூறவோ, அதைச் செயற் படுத்தவோ சக்தியற்றவனாயிருந்தான். காயாம்பூ தவிர, வேறு பெண்ணிடம் பழகாததனால் காதற் பெண்டிரின் இயல்பும் முற்றிலும் அவர் களிடம் தான் கொள்ள வேண்டும் முறையையும் அறியா திருந்தான். இக்காரணங்களாலேயே அவன் காயாம் பூவைப் பெறுவதில் முந்திக் கொள்ளாமல் தயங்க நேர்ந்தது. ஆனால் செங்கோடன் முந்திக் கொண்டபோது அவன் உடனே மனமுடைந்தான். அவனுக்கிருந்த கொஞ்சநஞ்ச தன்னம் பிக்கையும் தகர்ந்தது. செங்கோடன் கொடுத்த மூவாயிரத்தையும்