அப்பாத்துரையம் - 28
(246) || - ஆட்கொண்டது. அவள் அவனை நீர் தெளித்து உணர்வுறுத் தினாள். “நீ யார்? ஏன் இப்படி வந்து சாய்ந்திருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்றாள்.
அவன், அவள் எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த மதுரை என்பது அப்போது தெரியாது. அதனால் அவள் காலடி தழுவி, “காயம்பூ! என்னை மன்னித்து விடு. நீ இன்னொருவன் மனைவி என்பது தெரிந்தும், இதற்கும் சமயம் உன் காலடியில் கிடந்தாவது இறக்க எண்ணி வந்திருக்கிறேன். இந்தச் சமயம் செங்கோடனுக்குக் கூட என் மீது இரக்கமில்லாமல் போகாது” என்றான் மதுரை.
அவள் திடுக்கிட்டாள். அவனை வாரி அணைத்தெடுத்து தன் கட்டிலில் கொண்டு கிடத்தினாள். மெல்லத் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருந்த உண்மைகளையும் பட்டபாட்டினையும் எடுத்து உரைத்தாள். அவன் வருவான் என்ற நம்பிக்கை இழந்து, அன்றே தன் பணம் முழுவதையும் கோவிலுக்குக் கொடுத்த செயலை ஆற்றாமையுடன் கூறி அழுதாள். இன்னும் ஒரு மணி நேரம் சென்றிருந்தால் மருதுக்கு தான் செய்த சதியால் அவன் தூக்கிட்டுக் கொண்ட மரத்திலேயே தானும் தொங்கியிருக்க நேரிடும் என்று கூறிக் கதறினாள்.
-
செங்கோடன் இறத்ததும், அதன்பின் மருது அவள் காதல் பெறாது மாண்டதும், தனக்காகவே தையல் காத் திருந்ததும் கேட்ட மதுரை ஒருபுறம் தன் மடமைக்கு வருந்தினான். மறுபுறம் தன் இறுதி இன்பத்தை எண்ணியாவும் மறந்தான். ஆயினும் கடைசியில் தன்னையே உயிராகக் காதலித்த பிரியையிடம் வாலிபனாக வராது குற்றுயிராய் வந்த நிலையினை எண்ணி வருந்தினான்.
இன்பம் இனிது; துன்பங்களின் இறுதியில் இன்பம் ன்னும் இனிது; ஆனால் சூழ்நிலையால் அவன் அதை அனுபவிக்க முடியவில்லை. நீண்டகால நோயாலும் நலி வாலும் ஒரு சில நாட்களில் அவள் காலடியிலே கிடந்து இனிய கனவுகளுக்கிடையே உயிர் தந்தான்.
ரு
கன்னியரை அடக்கியாண்டு காளையர் உள்ளங்களை ஆட்டிப் படைத்த காயாம்பூ, தன் காதலுள்ளமறிந்த காதலனை ஆட்கொள்ள முடியாமல், மீண்டும் கன்னி யாகவே வாழ்வினைக்