பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

247

கழிக்க நேர்ந்தது. மூன்று மண வாழ்வு கழிந்ததும் அவள் உளம் தளர்ந்ததேயன்றி, வயது இருபதுக்கு மேல் ஏறவில்லை. திரும்பவும் இன்ப வாழ்வு வாழும் எண்ணம் அவளுக்கு இல்லை. அதே சமயம் தன் பிழைகளுக்கான ஒரே பரிகாரம் சமூக சேவையே என்பதை அவள் உணர்ந்தாள்.

வாலிகண்டபுரம் மக்களிடையே அது முதல் அவள் ஒரு தெய்வமானாள். அவளைக் கேலி செய்தோர் தொகை வரவரக் குறைந்தது. ஏனெனில் அவள் இளைஞர்க்கும் நங்கையர்க்கும் ஒரு தமக்கையாயிருந்து தன்னாலியன்ற தொண்டு செய்தாள். பெரி யோர் முதலோரைப் பேணினாள். சிறுவர் சிறுமியருக்குத் தாயைப் போல் ஆதாரமாய், அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்தினாள்.

நாற்பது ஆண்டுகள் சென்றபின் காயாம்பூ இயற்கை அடைந்தாள். அவள் விருப்பப்படி மக்கள் மதுரையை அடக்கம் செய்த இடத்திலேயே அவளையும் அடக்கம் செய்தனர். மண்ணுலகில் இளமையின் அறியாமைக்கும் அனுபவ மின்மைக்கும் ஆளான இரு உள்ளங்கள் மீண்டும் மண்ணிலே- இணையற்ற இயற்கையின் மடியில் ஒருங்கு புதையுண்டன.