4. தொண்டுள்ளம்
சின்னஞ்சிறு கிரேக்க நாட்டில் ஒரு மூலையில் நாகரிகத்தில் பின்தங்கிய மாசிடோனில் பிறந்தான் சிக்கந்தர் (அலெக் சாண்டர்) அவன் சிந்து ஆறுவரை மன்னர் மகுடங் களின் மீது நடந்து உலகளந்தான்! அராபிய வீரர் பலர் இஸ்லாத்தின் ஒளியையும் வீர மரபையும் மேல்திசையில் இஸ்பானிய (ஸ்பெயின்) வரைக்கும் கீழ்திசையில் கங்கை வரைக்கும் சீனக்கடல் வரைக்கும் கொண்டு சென்று பரப்பி யுள்ளனர். அராபியக் கலைஞர் மக்கமும் மதீனமும் பாக்தாதும், பாஸ்ராவும், கூர்ச்சரமும் எங்கும் மாடமாளிகைகளால் நிரப்பியுள்ளனர். அராபிய பாரசிகக் கவிஞர், கலைஞர் தம் கவிதைகளாலும் ஓவியங்களாலும் உலகைப் புத்துலகாக்கி யுள்ளனர். ஆற்றலும் அறிவும் அழகும் படைத்த வீர இளைஞரும் நங்கையரும் உலகில் எத்தனை எத்தனையோ வகைகளில் பயன்பட்டுப் பெருமையும் புகழும் நிலை நாட்டியுள்ளனர்!
ஆனால் நான்- நான்
ஹசன் கண்ணீர் வடித்தான், கண்ணீர் வடித்த அந்த முகத்தைப் பாலை நிலத்தின் தெண்ணீர் நிழற்படுத்திக் காட்டிற்று. ‘அந்தக் கண்ணீரில், அந்த முகத்தில் அழகுகூட இல்லையே, இயற்கையான தோற்றம் கூட இல்லையே! நோயின் கன்னங்கள், குழிவிழுந்த கண்கள்- உலகுக்கு வேறு வகையில் பயன்படாவிட்டாலும், கண்டவரைக் கவர்ந்து மகிழ்வூட்டும் கட்டழகு இல்லா விட்டாலும், பார்ப்பவருக்கு வெறுப்புத்தரும் அருவருப்பான தோற்றமாவது இல்லாமல் இருக்கக் கூடாதா?' என்று அவன் ஏங்கினான்.
அவன் கூனிக் குறுகிய உடல் உடையவன். கால்கள் இளம் பிள்ளை வாதத்தால் வற்றி வதங்கிச் செயலாற்றிருந்தன. கைகள் நடுக்கு வாதத்தால் ஓயாது ஆட்டங் கண்டன. பாலையில் பிறந்து,