(250)
||.
அப்பாத்துரையம் - 28
ச
அவனுக்குப் புகழார்வம் இருந்தது. ஆனால் செயல்களை அவன் புகழுக்காகச் செய்யவில்லை. அவை புகழுக்குரிய செயல்கள் என்றே அவன் கருதவில்லை. அவன் அன்புள்ளம் இவற்றைச் செய்தது- தன் வாழ்வின் ஏக்கத்திடையே கண்ணீர்த் துளிகள் வழிந்தோடும் கரடுமுரடான உள்ளங் களுடனேயே அவன் இவற்றைச் செய்துகொண்டு, சருகாக வாடி வதங்கிய மகிழம் பூப்போல எங்கும் மணம் பரப்பினான்.
அவன் புதர்வீடு புதர்வீடாகத்தான் இருந்தது. அதை அவன் புல்வீடாகக்கூட ஆக்கவில்லை. ஆக்க முயலவில்லை. ஆனால் நறுஞ்சுனை சூழ அவன் எங்கும் நிழல்தரும் மரஞ்செடி காடிகளும் மலர்ப் பண்ணைகளும் வைத்துப் பயிரிட்டான். அவன் ஆற்றல் சிறிதாயினும் அயர்ச்சியில்லாத அவன் முயற்சி பெரிதாய் இருந்தது. பகலின் வெப்பத்திலும் இரவின் குளிரிலும், பசியிலும் கடுந்துன்பத்தையோ விடாயின் வெந்துயரத்தையோ பாராமல் அவன் விடாமுயற்சியுடன் நறுஞ்சுனையைச் சுற்றியுள்ள பாலைவனப் பகுதியை ஒரு சோலைவனமாக்கினான். மக்கள் அக்காட்சியிலும் அதன் தண்ணொளியிலும் மகிழ்வுற்றனர். அதைத் தெய்வச் செயலால் அமைந்த பாலைத் தண்டலை என்றனர்! ஏனெனில் சோலைவனத்தை ஆக்கிய அத்தெய்வ உள்ளம் எவர் கண்முன்னும் எளிதில் காட்சியளிக்க வில்லை- காட்சியளித்தாலும் அதன் அருவருப்பான ஏலா உருவினனிடையே ஒரு தெய்வ உள்ளத்தின் எழிலை எவர் கண்டுணர முடியும்?
அவன் புதர்வீடு புதர் வீடாகத்தான் இருந்தது. ஆனால் அவன் நறுஞ்சுனையைச் சூழ ஒரு படிகக் கற்பந்தலும் பைந்தளிர்க் காவணமும் அமைந்தான். பாலைவனக் கோடி வரை பலநாள் நகர்ந்து நகர்ந்து சென்று அவன் களிமண் கொணர்ந்து சுட்டுச் சிறு சிறு செங்கல்கள் ஆக்கினான். இடிந்துவிழுந்த மாடங்களை எங்கெங்கெல்லாமோ தேடி எப்படி எப்படியோ அக்கற்களை இழைத்து இழைத்து அழகப்படிமங்களாக்கின.
அழகு என்பது அன்புருவே யன்றோ? எப்படி எப்படியோ அவன் கலைஞர் எவரும் செய்தற்கரிய கலையார்ந்த ஓர் இன்பத் தண்ணீர்ப் பந்தலை அந் நறுநீர்ச் சுனையருகே எழுப்பினான். மக்கள் நறுநிழற் சோலையில் தங்கி அந்நறுநீர்ச் சுனையின்