கன்னியின் சோதனை
[251
அழகில் ஈடுபட்டு நீரருந்தினர். கனிமரக்காவின் இனிய பழம் அருந்தினர். நறுமணமலர்கள் கொய்து சூடி மகிழ்ந்தனர். இவற்றைப் பாலை வெப்பிடையே ஆக்கிப் படைத்த தெய்வத்தை அவர்கள் வாயார வாழ்த்தினர். ஆனால் இப்போது, அவர்கள் கண்காணாத் தெய்வத்தை மட்டும் வாழ்த்தவில்லை. தண்ணீர்ப் பந்தலைக் கண்காணாத் தெய்வம் ஆக்கியிருக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்- ஒரு கண் கண்ட தெய்வ உள்ளம்- மனிதத் தெய்வம்தான் அதை ஆக்கியிருக்க முடியும் என்று கண்டனர்- அம்மனிதத் தெய்வத்தையே வாழ்த்தினர்! ஆனால் அந்த மனிதத் தெய்வம் அருவருப்பான ஏலமாட்டாக் கூனல் நோயாளி வடிவம் தாங்கி இருக்கும் என்பதை அவர்கள் எப்படி உணர முடியும்? ஆகவே அக் கண்கண்ட தெய்வம் கூட அவர்களுக்குக் கண்காணாத் தெய்வத்தின் ஒரு பண்புடனே, தோன்றா உருவாக, அவ் அருவருப்புருவில் உட்சுரந்து ஒளித்து நின்றது!
நன்மை அழகு கடந்து, அறிவு கடந்து, அன்புருவான நன்மை- எத்தனை நாள் மக்கள் உள்ளத்திலிருந்து மறைந்திருக்க முடியும்? இருளில் ஒளிகாணும் கதிர்போல், இரும்பைக் கவரும் காந்தம் போல அது மக்கள் உள்ளத்தில் தெய்வங்கடந்து தெய்வ உள்ளத்தை, தெய்வ உள்ளங்கடந்து தெய்வ வடிவைக் காணும் ஆர்வம் தூண்டி வந்தது.
“பைம்பொழில் அமைந்தது யாராலே? படிக நன்மாடம் எடுத்தவர் ஆர்? இவற்றை யெல்லாம் ஒருவர் - எமைப்
போல மனித உருவுடையார்- எங்
கேனும் இருந்திடல் வேண்டுமன்றோ?"
இந்த எண்ண அலைகள் பிரயாணிகளின் உள்ளங்களில்- சல்வர், ஏழை எளியவர் உங்ளங்களிலும்- குடிசைவாணர், அரண்மனை, மாடமாளிகைக் கோமான்கள் என்ற
வேறுபாடின்றி எல்லார் உள்ளங்களிலும்- ஒருங்கே எழுந்தன. தத்தம் உள்ளுணர் வால் தூண்டப்பட்டு, அன்புகலந்த அறிவுக் கண்களுடன் எல்லாரும் எங்கும் தேடலாயினர்.