அப்பாத்துரையம் - 28
252) ||__ அவன் புதர்வீட்டின் சிதைந்த பகுதிகளைச் செப்பம் செய்ய வேறு ஆளில்லை. அதில் கருத்துச் செலுத்த அவனுக்கும் நேரம் இல்லை. அவன் வீட்டருகே, நாற்புறமும், பரல் கற்கள், முட்கள் நிரம்பியிருந்தன. அவை அவன் நொந்த கால் களுக்கும் உடலுக்கும் நோவளித்தன. அவன் அவற்றில் இடர்ப்பட்டு டர்ப்பட்டு வாழ்ந்தான். அவன் அறிவு இப்பக்கம் செயலாற்ற வில்லை. அவனால் அவற்றை மாற்ற இயலவில்லை. ஆனால் அதே சமயம் அவன் பாலைவன உலகின் வாழ்வையே மாற்றப் பாடுபட்டான்.திட்டமின்றி, நோக்கமின்றி பெருஞ்செயல் அது என்ற எண்ணம் கூட இன்றி அவன் அதில் ஈடுபட்டான்!
பாலையிலே நறுஞ்சுனைகள் இன்பந் தருபவை. அவற்றுக்கு ஈடாக எந்த இன்பத்தையும் கூற முடியாது. ஆனால் அவை தூர தொலைவில், பல நாள் பயணங்களுக்கு ஒரு முறையாகவே, அமைவன. அத்துடன் அவை தங்கி வாழ உதவும் நிலைவர இன்பம் தருபவையல்ல. நீடித்த இன்பம் தருபவையுமல்ல. எல்லையற்ற நீடித்த துன்பத்திடையே மின்னல் போல இடையே வந்து மறையும் கண இன்பங்களாகவே அவை அமைய முடியும். நீண்ட நரகப் பரப்புக் கடந்தே இத்தகைய தனிச் சொர்க்கத்திலிருந்து அடுத்த தனிச் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும். சென்ற பின்னும் சிலநாள் சில சில பொழுதே தங்கலாம்- விரைந்து அதை விடுத்து எல்லையிலா நகரப்பரப்பில் புகுந்தாக வேண்டும். பாலை நில மக்களுக்கு இதுவே தெய்வ நியதியாய் இருந்தது. ஆனால் புதர்வீட்டு நியதியை மாற்ற முடியாத ஹசன்- இதை மாற்றியமைக்க முற்பட்டான். மாற்றியமைத்தான்! புதர் வீட்டைச் செப்பம் செய்யும் ஆற்றலோ, அறிவோ, நேரமோ, கருத்தோ இல்லாத அவனுக்குப் பாலைவன உலகையே மாற்றியமைக்க ஆற்றல் இருந்தது. அறிவு இருந்தது. நேரமும் கருத்தும் இருந்தன!
ஒருநாள் மணல் மலை, மறுநாள் ஆழ்கசம்; ஒரு பொழுது மேடு பள்ளங்கள், பாதைகள், மறுபொழுது உருவிலாப் பரப்பு என்ற ஓயாத மாறுபாட்டு நிலையுடையது பாலைப் பரப்பு. அது எல்லையற்ற கடல் போன்றது மட்டுமன்று; திக்குத் திசையற்ற வானவெளி போன்றது. மனிதன் ஆற்றலைக் கண்டு பேய்ச் சிரிப்புச் சிரிக்கும் இயற்கையின் அழிவாற்றல் இதுவே! அதில்