பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 28

ஹரிஹரி புக்கராயர்கள் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டாதலின், சமயதிவாகர வாமனரின் காலமும் கிட்டத்தட்ட அதுவேயாகும்.

இவர் அடிக்கடி உபயபாஷா கவிச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகின்றனர். நீலகேசி உரையின் பொரு செறிவும், செவ்விய சொல்லினிமையும் வாய்ந்த மணிப்பிர வாள நடையையும் நோக்க, இப்பெயர் பொருத்தமான தென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

நீலகேசி என்ற பெயரும் கதை மரபும்

நீலகேசி என்ற பெயர், இக்காவியத்தின் கதைத் தலைவியும் நடுநாயக உறுப்புமாகிய நீலகேசியின் பெயரை ஒட்டி எழுந்தது. அவள் பழையனூர் மயானத்திலிருந்து உயிர்ப்பலி கொள்ளும் காளியாகத் தோற்றமளிக்கிறாள். அவள் புகழ் தமிழ்நாடு மட்டுமன்றி வடநாட்டிலும் பரவியிருந்தது. புலி யுண்ணும் சிறு தெய்வங்களிடையே அவள் தலைமையிடம் தாங்கியவள். வடநாட்டில் பலாலயம் என்ற நகர்ப்புற மயானத் திலுள்ள காளிக்கு உயிர்ப்பலி செய்யப்படுவதை, முனிசந்திரன் என்ற சமண அறிவன் தடுத்து அதனிடமாக உயிர்கள் போன்ற மண்ணுருக்கள் செய்து அளிக்கும்படி மக்களைத் தூண்டினான். பலாலயத்துக் காளி இது கண்டு மனம் நொந்து, தவ ஆற்றல் மிக்க முனிவனை அணுக அஞ்சி, தன்னினும் பேராற்றல் உடைய பழயனூர் நீலகேசியின் உதவி கோரினாள். பாயனூர் நீலி அதன்படி முனியை அடைந்து, பலவகைகளில் அவனை அச்சுறுத்தியும் அவன் அசையாதது கண்டு மாயத்தால் வெல்ல எண்ணி, அழகிய நங்கை உருக்கொண்டு, அவனை மயக்க முயன்றாள். முனியோ, தன் நுண்ணுணர்வால் அவள் மெய்மை கண்ட கூற, அவள் அவர் பெருமையைக் கண்டு அஞ்சிப் பணிந்து, நீர் இத்தனை ஆற்றல் அடைந்த வகை யாது என வினவினாள். முனிவர் சமண அறத்தின் வலியை உணர்ந்த அவள், தன் தீ நெறி விடுத்து முனிவர் மாணவியாய், சமண அறம் பயின்று அறிவு தெளிந்தாள். தான் தெளிந்ததுடன் அமையாது, உலகமுற்றும் தெரட்ட விரைந்து அவள் பல இடங்களிலும் வெற்றிபடத் திரிந்து,புத்தர், ஆசீவகர், சாங்கியர், வேதவாதிகள் ஆகிய பல்சமய