(254) ||.
அப்பாத்துரையம் - 28
கரைந்தன. அவனுக்கு அவை சாக்குகளல்ல, பைகளல்ல, கந்தல் கூளங்களல்ல. ஊழை ஊழை ஊழையே துணைக் கருவியாகக் கொண்டு வெல்ல முற்படுபவன்போல, மணற் புயலை மணலாலேயே தடுக்க எண்ணி, அதற்காக அவன் அமைந்தன, சாக்குகளிலும் பைகளிலும் கந்தல் கூளங்களிலும் கட்டப்பட்ட மணலே அவனுக்கு மணற்புயலின் அழிவு தடுக்க உதவும் மணற் கோட்டைக்குரிய செங்கல்கள் ஆயின.
சிறுகச்சிறுக அவன் பாலைவனப் பாதைகளை ஒவ்வொரு பகுதியாகத் தேர்ந்து, அவற்றைத் தற்காலிகமாகச் சமதளப் படுத்தினான். புயல் அவற்றை அழிக்குமுன் அவன் விரைந்து அவற்றின் மீது தளர்வாக மணல் பெய்யப்பட்ட சாக்குகளைப் பரப்பினான். பின் அத்தற்காலிகப் பாதையின் இருபுறமும் மணற் சாக்குகள், பைகள், மூட்டைகளை அடுக்கி மணற் கோட்டைகள் அமைத்தான். பீத்தல் சாக்குகள், நைந்து கிழிந்த பைகள், சிலசமயம் மணற் குவியல்களை நடுநடுவே வைத்து அவன் சிக்கனமும் பேணிக் கோட்டையையும் உலைக் கோட்டை ஆக்கினான். மணற் புயல் இருபுறமும் குவித்த மணலே இதனை உலவாக் கோட்டை ஆக்கிற்று. அம்மதில்களின் பாதுகாப்பிலே அவற்றின் ஊடாக, அவன் சுட்ட களிமண் குழாய்களை அடுக்கிப் பச்சைக் களி மண்ணில் பொதிந்து இணைத்து, அக்குழாய்களின் மூலமாகவே நறுஞ்சுனையிலிருந்து ஒழுகும் கழிவு நீரைக் கசியவிட்டால், இக் கசிவின் ஈரம் இருபுறமும் சோலை வனச்சாலை வளர்த்தது, சாலையின் மரஞ்செடிகொடிகள் பாதையில் நடப்பவருக்கு நிழலும் நிலத்துக்குக் குளிர்ச்சியும் அளித்தன. அத்துடன் அவற்றின் வேர்கள் விரைவில் மணற் சாக்குகள் நீடித்த வலுவை நிலையான உயிர்வலு ஆக்கின.
க்
முன்பு பாலைவனம் எங்கும் ஆங்காங்கே மட்டுமே துளி துளிச் சோலை வனங்கள் இருந்தன. இப்போது சோலை வனத்துக்குச் சோலைவனம் சோலைவனச் சாலைகள் அமைந்தன. பாலைவனக் கப்பல்கள் என்று அழைக்கப்படும் ஒட்டகைகள் செல்வருக்கு மட்டுமே உதவின. அவர்களுக்கும் முயற்சி குறைந்ததேயன்றி அயற்சி நீங்கவில்லை. வெப்பிலிருந்து மிகுதி பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இப்போதோ ஹசன் முயற்சியால் செல்வர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும்