பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

255

விலங்குகளுக்கும் ஒருங்கே நிழலும் குளிர்ச்சியும் நீரும் உணவும் நெடுகக் கிடைக்கலாயின. பாதை நெடுக ஹசன் மரங்களிலே சுற்றிப் புல் உரண்பாவினான்.

ஹசன் உழைப்பின் பயனையே இதுவரை கண்டு வியந்த மக்கள் அதே உழைப்பையே நேரில் கண்டு இன்னும் வியப்பும் ஆர்வமும் கொண்டனர். இப்போது அவன் கண்காணாத் தெய்வமாக, தோன்றாத் தெய்வ உள்ளமாக இல்லை. அவன் கண்கண்ட தெய்வ உருவாகப் பேணிப் பூஜிக்கப்பட்டான். வணங்கப்பட்டான். அவன் உருவம் அவன் தெய்வீக அன்புள்ளத்தைப் பெருக்கிக் காட்டவே உதவிற்று. அவன் ஏலாமை அவன் தெய்வீக ஆற்றலுக்குச் சான்றளித்தன. அவன் அன்பின் அளவு மக்கள் கடவுளைப் பற்றிக் கொண்டிருந்த வரண்ட எண்ணங்களுக்கு களிப்பூட்டிற்று. அவன் புகழ் எங்கும் பரவிற்று- குடிசைகளில் தவழ்ந்தது, கூடகோபுரங்களில் உலவிற்று. நாள்தோறும் மன்னர் இளங்கோக்கள் நூற்றுக் கணக்கில் அறிஞர் கலைஞர் ஆயிரக்கணக்கில், மக்கள், ஏழை, எளியர் பதினாயிர நூறாயிரக் கணக்கில் அவன் தெய்வ உருக்காண வந்து வந்து குழுமினர்-ஒருவரை ஒருவர் முந்தி நெருக்கினர்.

புகழுக்கு ஆர்வமதியுருவான புகழ்த் தென்றலுக்கு- அன்புருவான புகழ் இசைக்கு கலந்தவன் தான் அவன். மன்னர், வீரர், அறிஞர், கலைஞர் ஆற்றல் எண்ணிப் புழுங்கியவன்தான் அவன். ஆனால் இப்போது புகழ் அவனைச் சுற்றிப் புயலால் அடித்தது எக்காளமாய் முழங்கிற்று. மன்னர், வீரர், அறிஞர், கலைஞர் ஆகிய எல்லார் புகழும் தாண்டி, தெய்வத்துடனேயே போட்டியிடும் அரும்புகழ் ஆயிற்று. ஏனெனில் அம்மன்னர், வீரர், அறிஞர், கலைஞரே வியத்தகு தெய்வத்தைக்காண வருவது போல அவனைக் காண வந்தனர். ஏழையர் குடிசையை இன்ப வாழ்வாக்கப்பாடுபட்ட அவனுக்கு, பாலைவனத்தையே செல்வர் மாளிகை சூழ்ந்த உரிய புதர்வீட்டைப் பொன் மாளிகையாக்க இப்போது செல்வர் விரைந்தனர். ஏழைகள் தொண்டனாகிய அவன் சூழலை அரண்மனைச் சூழலாக்க மன்னர்கள் போட்டியிட்டு முந்தினர். அருவறுப்புக்குரிய அவன் கூனிய ஏலாநோயுடல் அரைகுறையாக மூடிய கந்தலகற்றிப் பொன்