பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

அப்பாத்துரையம் - 28

அணிமணி பட்டாடை, பஞ்சணை மலரணை அனைக்க ஏழை யரும் செல்வர்களும் வீரமைந்தர்களும் அழகிளம் பூவையரும் அரும்பாடுபட்டனர். இவற்றை அவன்ஏற்கவில்லை, மறுக்க வில்லை. ஆனால் புகழுக்கேங்கிய அவனது நைந்த அன்புள்ளம் ஒருபுறம் ஆறுதல் பெற்றது ஒருபுறம் சிரித்தது! ஆனால் இவ்விரண்டு வகை உணர்ச்சிகளிடையே புதிய ஒரு வேதனையும் எழுந்தது. ஏழை எளியார் தொண்டை எல்லாரும் மதித்தனர்- ஏழையும் செல்வரும் மதித்தனர்- தெய்வப்பண்பாகப் போற்றிப் பூசிக்க நெருங்கினர்- அதற்காக உலகின் உழைப்பும்- செல்வமும் குவிக்க முற்பட்டனர்! ஆனால் அவ் ஏழையின் ஒரு சிறு கூறினை ஏழைகளோ, அச்செல்வத்தின் ஒரு திவலையைச் செல்வர்களோ அவ் ஏழை பணியில் ஈடுபடுத்த முனைவதில்லை அவர்கள் அன்புத் தெய்வத்தைப் பூசித்தனர்- வழிபடவில்லை. அன்பே அறம் என்று கண்ணாரக் காண்கின்றனர்- ஆனால் பின்பற்றும் அறம் அதுவன்று!

ஆரவாரப் புகழ்ப் பூசனைகளை விரும்பாமல், அதே சமயம் அவற்றை வெறுப்பதாகக்கூடக் காட்டிக்கொள்ளாமல், தொண்டின் கடுமையையும் புகழின் வெறுமையையும், அன்பின் அரும்பெறல் நிலையையும் அஃது இல்லா அறத்தின் மலிவையும் எண்ணி ஹசன் புதிய புன்முறுவலுடனும் புதிய ஏக்கத்துடனும் இயற்கையின் அமைதியில் அறிந்தான். அவன் கண்கண்ட மனித உண்மை உலகம் மீட்டும் மெள்ள மெள்ள மறந்தது- அவனைக் கண்காணாத் தெய்வத்தின் கண்காணா வடிவாக்கி அம் முறையிலே பூசனையும் நடத்திற்று.