அப்பாத்துரையம் - 28
(260) || செய்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு கொடியின்மீது சாய்ந்து கொண்டு பேசிய பாணியிலேயே நங்கை அதன் துதிக்கையில் சாய்ந்துகொண்டு பேசிய வண்ணம் நம்பியிடம் கருத்துச் செலுத்தியிருந்தாள்.
-
நம்பி வேறு யாருமல்ல அவ்வியற்கைச் சூழலின் செல்வமனைத்திற்கும் உரியவனான பண்ணை முதல்வர் ஆராவமுதனே. அவனிடம் ஊடாடியிருந்த நங்கை அவன் காதலியல்ல. அவன் காதலித்து மணந்த புதுமணப் பெண் அருண்மொழித்தேவி. அவர்கள் மன்றல் மேடையேறி மாதங் கள் ஆண்டாய் வளர்ந்துவிட்டன. ஆயினும் நங்கையின் நாணமும் நம்பியின் ஆர்வமும் பழகிய காதலாக மாறாமலே இருந்தன. தமிழின் என்றும் மாறாத கன்னிமை எழில் அவர்கள் காதல் மீது படர்ந்திருந்தது. அக் கன்னியிளங் காதல் பண்ணை நாச்சியாராய்விட்ட அருண் மொழியை இப்போது ஒரு கன்னித் தாயாகவே ஆக்கியிருந்தது.
அவர்களருகே காதற் சிறுவன்போல் விளையாடிய யானைக்கன்று அவர்கள் திருமணத்தின்போது விசயநகரப் பேரரசன் கிருட்டிணதேவராயன் அனுப்பிய பரிசேயாகும். தாயாகுமுன்பே அருண்மொழி அதன் மீது தாய்ப்பாசம் காட்டியிருந்தாள். அந்த உரிமையை அது ஆராவமுதனிடமும் காட்டத் தயங்கவில்லை.
காதல் நங்கையிடம் ஆராவமுதன் அவ்வாண்டு நடைபெற விருந்த இந்திரவிழா பற்றியே பேசினார். ஆயினும் அப்பேச்சு அருண்மொழிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியையும் மற்றொருபுறம் வெட்கத்தையும் நாணத்தையும் பெருக்கின.
66
“அருள், இந்திர விழாவை ஆண்டுதோறும் நடத்தும் பொறுப்பு ஆரியூர் மரபைச் சார்ந்தது. அந்த மரபில் பிறந்த காரணத்தால் இதுவரை நான் அதை நடத்தி வந்தேன். ஆனால்... ஆரியூர் மரபு இப்போது... உன்னிடம் வந்துவிட்டது...நீதான்..."
அவன் பேசி முடிக்கவில்லை. அவளும் மறுமொழி கூறவில்லை. ஆனால் அவள் ஆர்வக் குறும்பு நகை முழுதும் பேசிற்று. நாணிக் கோணிய அவள் உடலும் செந்தாமரை யென மலர்ந்த ஒளி முகமும் பேசாத மறுமொழி பேசிற்று.