யாழ் நங்கை
261
இறுதியில் “பெண் எப்படி இதை எல்லாம் செய்வதாம்?” என்றாள் அவள்.
“நீ பெண்தான். ஆனால்..."
அவன் மேலும் என்ன கூறப் போகிறான் என்பதுகூடஅவள் அறியாததன்று. அவள் தந்தை தஞ்சையாண்ட செல்வப்ப நாயகரின் முது பேரமைச்சரான முத்தப்ப வாண்டையார் தாயற்ற குழந்தையாகிய அவளுக்கு அவர் ஒரு தாயாகவும் விளங்கியிருந்தார். மணமானபோது தன் காதலுடன் புது வாழ்வகம் செல்லும் சமயம்கூட அவர் மடியிலிருந்து இறங்கிச் சல்வது அவளுக்குக் கலக்கம் தரத்தவறவில்லை. ஆனால் அவளுடன் இணைபிரியா விளையாட்டுத் தோழனாயிருந்த அண்ணன் மெய்யப்பனை விட்டுப் பிரிவது அதனிலும் கடுந்தேர்வாயிற்று. அவள் தன்னிடம் பத்துத்தடவை வந்து, பத்துத்தடவை அவனிடம் திரும்பித் திரும்பிச் சென்று விடை பெறுவதையும், முத்தப்பருங்கூடக் கண் கலங்குவதையும் கண்ட ஆராவமுதர்க்கு அவளை இன்னும் சில நாள் அண்ணனுடனேயே இருக்கவிட்டுப் போகலாமா என்றுகூடத் தோன்றிற்று.
66
'ஏன் மாமா, மெய்யனையே உங்கள் மகளுக்குச் சீதன மாக அனுப்பிவிடுவதுதானே! என்று கூட அவன் குறும் பாக முத்தப்ப நாயகரை நோக்கிக் கூறினான். “மெய்யப்பன் என்ன பொம்மையா, நகைப் பெட்டியா சீதனமாக அனுப்ப! நாளை அவன் இன்னொருத்திக்குச் சொத்தாக வேண்டியவன் தானே!” என்றார் முத்தையர்.
அருள் மொழியிடம் மெய்ப்பனைப் பற்றியும் அவனை விட்டு அவள் பிரிய முடியாமல் தவித்த திருமணக் காலக் காட்சியைப் பற்றியும் ஆராவமுதர் பேசாத நாளே கிடையாது.
""
"நீ பெண்தான். ஆனால்...' என்று ஆராவமுதன் தொடங்கிய போது கணவன் குறும்பு தன்னிடமிருந்து அண்ணன் பக்கந்தான் திரும்புகிறது என்று அவள் உணர்ந்து கொண்டாள். ஆயினும் உணராதது போல அவள் மீண்டும் கோணினாள்.
"நீ பெண்தான். ஆனால் இதைச் செய்யும் தகுதியுடைய ஒருவரை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவர் என்