(262)
அப்பாத்துரையம் - 28
கட்டளைகளை மதியாத உன் விருப்பம் அவருக்குக் கட்டளைகளைவிட வலிமையுள்ளது. அதனால்தான் பொறுப்பை இப்போதே உன்னிடமுள்ள புதிய மரபுக்கு விட்டுவிட எண்ணினேன்” என்றான் ஆராவமுதன்.
முன்னிலும் பன்மடங்கு வெட்கத்துடன், அதே சமயம் தன் அண்ணனிடம் கணவன் காட்டிய பாசம், அவனைக் காணும் ஆர்வம் ஆகியவற்றால் உள்ளூர உவகை பொங்கும் நிலையில் அவள் வாய் முத்துதிர்த்தாள். “என் விருப்பம் என்ன, எனக்குத் தாங்களிட்ட கட்டளை என்று கூறியனுப்புகிறேன்” என்றாள்.
ஆரியூர்ப் பண்ணை மாளிகையின் உள்ளரங்க நங்கை யாகிய செம்மாமலர், பண்ணை நாச்சியார் அருண்மொழித் தேவியாரின் முடங்கலுடன் தஞ்சை சென்றபோது, மெய்யப்ப வாண்டையார் வரவேற்றுத் தங்கை விருப்பப் படியும் மைத்துனர் குறிப்புப்படியும் ஆரியூர் வந்து விழாவுக்கான பொறுப்பு முழுவதும் ஏற்பதாகக் கூறினான். தங்கையாயினும் பண்ணையரசியான அருண்மொழித் தேவியாருக்கு அவன் தன் சூழ்துணைப்பாங்கன் மாக்கோதை நம்பியையே தூதாக அனுப்பினான். தங்கை விருப்பத்திற்கும் மைத்துனர் குறிப்புக்கும் தான் அளிக்கும் மதிப்பைக் காட்டும்படி அவள் தன் தாய் செல்வமாக வளர்த்து வந்த பறவைகளில் ஒரு பஞ்சவண்ணக் கிளியைத் தேர்ந்தெடுத்து அதை அவர்கட்குப் பரிசாக அனுப்பினாள். இந்திர விழாவன்று இதற்குச் சோடியான பறவையையும் பிற பொருள்களையும் கொண்டு வருவதாக உறுதி கூறியனுப்பினாள்.
தஞ்சையிலிருந்து விழாவின்போது யார் யார் வருவார்கள் என்பதே ஆரியூர்ப் பண்ணையின் உள்ளரங்கப் பணிப் பெண்களிடையே தீராப் பேச்சாயிருந்தது. இந்த நங்கைக்கு அந்த நம்பி, அந்த நம்பிக்கு இந்த நங்கை என்றுகூட அவர்கள் சோடியிணைத்துக் குறும்பாட்டமாடினர்.தஞ்சை நம்பியிருள் மிகுதியாக அடிபட்ட பெயர் மாக்கோதை பற்றியதே. 'அரண்மனையரங்க யாழ் நங்கை தன் உள்ளத்தை எவரும் அறியாமல் மூடி வைத்தாலும் அவள் உள்ளார மாக்கோதை யிடமே ஈடுபட்டதை தோழியர் அறிந்து அவளைக் கேலி செய்யச் சூழ்ந்தனர். அவள் தனக்கு எவரிடமும் பாசம் கிடையாது என்று