பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

11

அறிஞரையும் அடைந்து வாதில் வென்று, தன் கோட்பாட்டை நிறுவினாள். இக்கதை வாயிலாக ஆசிரியர் பல சமயங்களின் கொள்கைகளையும் விரித்துரைத்து, அவற்றின் குறைகளையும், சமணநெறியின் நிறைவையும் எடுத்து விளக்குகிறார்.

நீலகேசி காவியத்தில் கூறப்பட்ட நீலகேசி கதை, பல வகையிலும் தேவார ஆசிரியர்களால் குறிக்கப்படும் பழையனூர்க் காளி நீலியை நினைப்பூட்டுகின்றது. இப்பழையனூர் எதன் பழையனூர் என்று கூறப்படுவது. வட ஆர்க்காட்டு வட்டத்தில் தேவார மூவர்களாலும் பாடப்பட்ட திருவாலங்காட்டின் அருகில் உள்ளது. மூவரும் தத்தம் திருவாலங்காட்டுப் பதிகங்களில் பழையனூரைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

திருவாலங்காட்டை அடுத்த இப்ழையனூரில் ஒரு காளி கோயில் இருந்தது என்று திருவாலங்காட்டுத் தலபுராணத் தில் கூறப்படுகிறது. அப்புராணங் கூறுகிறபடி, பழையனூர்க் காளி, தம் உழையர்(பரிவாரங்) களான சிறுதெய்வங்களுடன் மக்களுக்கும் உயிர்களுக்கும் மிகுதியான அச்சம் விளைத்து வந்ததாகத் தெரிகிறது. தேவர்கள் கூட அவள் செயல்கள் கண்டு நடுங்கி வெருவி, தம்மை அவள் கொடுமையினின்று காக்கும்படி திருமாலிடம் சென்று முறையிட்டனர். இக்காளி பார்வதியின் அருள் துணை பெற்றவளாதலால்,சிவபிரானிடமே சென்று உதவி நாடுங்கள் எனத் திருமால் தூண்டினர். சிவபிரானும் அவளை நேரடியாக எதிர்த்துப் போராடத் துணியாது சூழ்ச்சியால் வெல்லக் கருதி, அவளைக் கூத்துப்போட்டிக் கழைத்தார். அவள் இணங்கவே, தேவர்கள் நடுவண்மையின் கீழ் போட்டி தொடங்கிற்று. காளி சிவபிரானுக்கு எவ்வகையிலும் கூத்தில் இளைக்காததன்றிச் சில சமயம் அவரை மிஞ்சியவளாகவும் காணப்படவே, நடுவர்கள் சிவபிரான் பக்கம் தீர்ப்புக்கூறமுடியாது தத்தளித்தனர். இறுதியில் சிவபிரான் சண்டக்கூத்தாடத் தொடங்கினார். சண்டக்கூத்தில் கூத்தர் ஒருகாலைத் தலைக்கு நேரே தூக்கிச் சுழன்றாடவேண்டும். காளியாயினும் பெண் தெய்வமாதலால், நீலி இதைச் செய்யக்கூடாமல் தோல்வியை ஒத்துக்கொண்டாள். இவ்வெற்றியின் காரணமாகச் சிவபிரான் கூத்தரசர் (நடராஜர்) ஆயினார். தலபுராணத்தின் ஆசிரியர் பழையனூர்க் காளியை நீலி எனக் குறித்துள்ளார். திருஞான