யாழ் நங்கை
[263
மறுக்க மறுக்க, அவர்கள் மேலும் மேலும் நம்பியுடன் நங்கைக்கு மேலும் மேலும் முடிச்சுப் போட்டுப் பகர்வதிலேயே குறியாயினர். ஆனால் தஞ்சை சென்ற செம்மாமலர் மீண்டு வந்தபோது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அன்று மாளிகையின் விருந்துக்கூடப் பொறுப்புத் தற்செயலாக யாழ்நங்கையின் பொறுப்பாயிருந்தது. மெய்யப்பனிடமிருந்து தூது கொண்டு வந்த மாக்கோதையை அவளே வரவேற்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளூரக் காதலித்தவர்களேயானாலும், ஒருவர் உள்ளத்தை ஒருவர் அறிந்தது கிடையாது. இந்நிலையை அவர்களது அன்றைய நேருக்குநேர் சந்திப்பு ஒரு நொடியில் கலைத்தது. ஏனெனில் இருவருமே தொடக்கத்தில் தத்தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடமையாற்ற முனைந்து அதில் தோல்வியுற்றனர். இறுதியில் தம் உள்ள உணர்ச்சிகளையெல்லாம் இருவரும் ஒருவருக்கொருவர் கொட்டிக்கொள்ள நேர்ந்தது. அதுமட்டு மன்று. பேச்சினிடையே மாக்கோதை யாழ் நங்கைக்குத் தான் கொண்டுவந்த அரும்பொருளான பஞ்சவண்ணக் கிளியைக் காட்ட அதன் கூட்டைத் திறந்தான். யாழ் நங்கை கிளியுடன் விளையாடிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள். இருவரும் பேச்சில் மட்டும் ஈடுபட்டுக் கிளியை மறந்துவிடவே அது மெல்ல நழுவிப் பறந்தோடிப் போயிற்று.
யாழ்நங்கையின் ஆருயிர்த் தோழியான வாணுதல் வந்து கூட்டின் வெறுமை பற்றி நினைவூட்டிய பின்தான் காதலர் தம் பெரும்பிழை கண்டு கலங்கினர்.
யாழ் நங்கையைப் போலவே வாணுதலும் மாக்கோதை நம்பி என்ற இளைஞனிடம் உளம் பறிகொடுத்திருந்தாள். ஆனால் பண்ணையின் உள்ளரங்கக் காவல் முதல்வனான ஒய்யார நம்பி அவளைத் தனக்கே உரிமையாக்க எண்ணியிருந்ததால் அவளைத் தன் வயப்படுத்த அல்லது தொல்லை கொடுத்துத் திருப்ப எண்ணியிருந்தான். யாழ் நங்கை அவள் தோழியென்பதை எண்ணி அவளைத் துன்புறுத்தும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அவளை அவன் பழி தீர்த்ததுடன் விடாமல், கடமை தவற்றுக்காக அவளைக் காவலில் வைத்து ஒறுக்கவும் முற்பட்டான். அவன் எதிர்பார்த்தது போலே மாக்கோதை