யாழ் நங்கை
உ
265
பாதுகாப்புக்காக யாழ் நங்கை. நிலவே போன்ற வண்ணமுடைய வெண்பட்டு முக்காடிட்டு வருவதென்றும் முடிவு செய்யப்ப ட்டிருந்தது. இயல்பாக அதே இரவு நிலவில் அதே இடத்தை அதே முறையில் நிலவுக் குறியாக்கிச் சந்திப்பது என்று வாணுதல், மாக்கோதை ஆகிய சோடிக் காதலர் திட்டமிட் டிருந்தனர். முதலில் அவ்விடம் வந்த மாக்கோதை அங்கே காத்திருந்த வாணுதலையே தன் காதலி என்று கருதி அவளை அருகிலுள்ள புன்னைப் பொதும்பருக்கு ஆர்வத்துடன் இட்டுச் சென்றான். கிட்டத்தட்ட அதே முறையில் சற்றுப் பின் வந்த வில்லாளன் அச்சமயம் அவ்விடம் வந்த யாழ் நங்கையையே தன் காதலி என்று கருதி அதே பொதும்பருக்குள் இட்டுச் சென்றான். ஆனால் சோடியுடன் சோடி சந்திக்கும்போது ஒவ்வொருவரும் தத்தம் காதலியருடன் பேச நேர்ந்தது. தங்கள் தவற்றை இதனால்
ரு காதலரும் உணர்ந்து கொண்டனர். ஆனால் காதலியர் இருவரும் இதற்குள் ஒருவரை ஒருவர் அடையாளமறிந்து கொண்டு, தம் பிழை அவ்வளவு பெரும்பிழையாய் விடவில்லை என்று கண்டு சிரித்தனர். இரு சோடிகளும் தவறு திருந்தி ஒருங்கே பேசத் தொடங்கினர்.
தொலைவிலிருந்தே வில்லாளனைப் பின் தொடர்ந்த காவல் முதல்வன் ஒய்யார நம்பி, அவனுடன் இணைந்து சென்ற உருவம் கண்டதே வாள் நுதலின் குற்றங் கண்டு அவளைக் கைப்பற்ற அத்தறுவாயைப் பயன்படுத்த விரைந்தான். தொலைவில் அவன் சாயல் கண்டதே வில்லாளன் மலைப் புற்றான். ஆனால் மாக்கோதை பெண்டிர் இருவரையுமே பொதும்பரில் மறைத்துவிட்டு, வாணுதல் முடக்கைத் தான் போர்த்துக் கொண்டு வில்லாளனுடன் வெளியேறி வந்தான். மாக்கோதையையே வாணுதலென்று கருதி ஒய்யார நம்பி அவனை இழுத்துச் சென்றான். அத்துடன், “சான்றுடன் தோழி கடமை தவறியும் தப்பினாள். இன்று நீ அகப்பட்டுக் கொண்டாய். நீ என்னுடன் இணைந்து கொள்கிறாயா அல்லது உன் தவற்றை மாளிகை முழுதும் அறியச் செய்து தண்டிக்கவா?” என்று பேசினான்.
இச்சமயம் பார்த்து மாக்கோதை முடக்கெறிந்து அவன் கன்னத்திலறைந்தான். “கடமை தவறியது இப்போது யார்,