அப்பாத்துரையம் - 28
(266) || தெரிகிறதா?" என்று கூறி அவனை அவமதிப்புடன் அவ் விடம் விட்டுத் துரத்தினான்.
தன் ஆவலும் நிறைவேறாமல், அவமதிப்பும் நேர்ந்தது கண்ட காவல் முதல்வன் ஒய்யாரன் இப்போது எப்படியாவது பழிவாங்கும் உறுதியுடன் மறை சூழ்ச்சிகளில் முனைந்தான். சூழ் நிகழ்ச்சிகள் அவனுக்கு இவ்வகையில் வாய்ப்புக்கள் அளித்தன.
தை
வாணுதலின் காதல் விளையாட்டுயாழ்நங்கையின் ஆர்வப் பேச்சுக் கடந்து வினையாயிற்று. அவள் வயிற்றில் அதன் விளம்பரச் சின்னமாகக் கரு வளர்ந்து வந்தது. அருள்மொழித்தேவி குறிப்பாலறிந்தும் சினங் கொள்வதற்கு மாறாக இரக்கமுற்று, மாளிகையும் காத்து அவளுக்கு எவ்வாறு உதவுவது என்று கவலை கொண்டாள். ஆனால் அவள் இதை அறியவில்லை என்று நினைத்து அறியுமுன்னே ஒய்யாரன் விரைந்து திட்டம் வகுத்தான். முதலில் அவன் வில்லாளனின் தமையனான மும்முடி நம்பியினிடமும் மாக்கோதையின் தந்தையான வையாபுரி வாணரிடமும் அவ்விருவரின் பிழைகளைப் பெருக்கி இரு குடும்பங்களிலும் பிணக்கு உண்டு பண்ணினான். மற்றொரு புறம் அவன் அருள்மொழித்தேவியை தண்டனையளித்ததாகப் பாவித்துக் காதல் துணைவர்களைத் தன் பிடியிலிறுக்கிவிட முனைந்தான்.
மும்முடி கன்னியரையும் காதலையும் வெறுத்தவன். தன் ளவலையும் பெண்டிர் தீண்டாப் பெட்டகமாக வளர்ப் பதில் முனைந்தவன். தன்னை மறைத்துத் தன் ஆணையை மீறிய வில்லாளனை அவன் கண்டவாறு பேசியதுடன் நில்லாமல், வீட்டினுள்ளேயே பூட்டிச் சிறை வைத்துவிட்டு அவன் உடல் நலம் கெட்டுவிட்டதென்ற சாக்குக் கூறி அவன் பதவியைப் பார்த்து வந்தான். வையாபுரி வாணனும் இதுபோலவே தன் மைந்தன் மீது கடுஞ் சீற்றங்கொண்டு அவனைக் கடிந்து கொண்டான். தன் பதவியை இதற்குமுன் அவன் மைந்தனுக்கு விட்டுக் கொடுத்துத்தான் பசுமலையில் பண்பார்ந்த தமிழ்ப் பணியிலும் நல்ல திருப்பணியிலும் ஈடுபட்டிருந்தான்.இப்போது அவனும் தனயனைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்தித் தன் பழம் பணிமேற்கொண்டான். ஆனால் தன்னிலும் மூப்பும் அனுபவமும் மிக்க வையாபுரி வாணர் வருகை மும்முடிக்குப் பிடிக்கவில்லை.