யாழ் நங்கை
[267
இருவரும் அடிக்கடி மாளிகைக் காவற் பணியில் ஒருங்கு ஈடுபட நேர்ந்ததனால் அவர்கள் அடிக்கடி வாய்ச்சண்டையிட்டு வந்தனர். தன் தம்பியைக் கெடுத்தவன் மாக்கோதை என்று மும்முடியும், தன் தனயனைக் கெடுத்தது வில்லாளனே யென்றும் அவர்கள் வாதாடி வந்தனர்.
மாக்கோதை தன் தந்தையின் மனம் புண்பட நடந்த தற்காக வருந்தி அவர் திருப்பணியைத்தான் மேற்கொண்டு திருநீறும், தவமணி மாலையும் காவியுடையும் பூண்டு பசுமலையருகே தங்கினான். இரவெலாம் அவன் உள்ளம் அவனையும் மீறி யாழ் நங்கையை எண்ணி மிகவே, அதனைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் அவன் புறங்காட்டில் எலும்பு களிடையே திரிந்து உள்ளத்துக்கு வைராக்கியம் உண்டு பண்ண முயன்று கொண்டிருந்தான். இச்சமயம் அழகிய பூம்பல்லக்கில் ஒரு பிணம் புதைக்கப்பட வந்தது கண்டு சற்றே விலகினான். ஆனால் பிணத்தைக் கையும் வாயும் கட்டிக் கொணர்ந்தவர்களே பிணத்துடன் கோபாவேசத்துடன் பேசுவதையும் பிணம் பெருமூச்சு விட்டு எதிர்த்துரையாடுவதையும் கண்டு அவன் கிலியடைந்தான். உண்மையில் பிணமாகக் கட்டப்பட்டுக் கொண்டு வரப்பட்டவள் வாணுதலே. பண்ணை நாச்சியார் கொலைத்தீர்ப்பை நிறைவேற்றுவதாக வாக்களித்து அவள் அவளைக் கட்டிக் கங்கன், திம்மன் என்ற தன் கூலிக் கொலைகாரர் வசம் ஒப்படைத்திருந்தாள்.கடைசி நேரத்தில் காதலனைத் துறந்து ஒய்யாரனை மணக்க இசைந்தால், காதலனையே கொன் றொழித்து அவள் பிள்ளையுடன் அவளை ஏற்பதாகக் கூறும்படி கொலைகாரருக்கு ஆணையிடப்பட்டிருந்தது.பிணக்கோலத்தில்
அவர்கள் பேச நேர்ந்த வகை இதுவே.
"தேவி, என் காதலுக்காக என்னைக் கொல்லும்படி தீர்ப்பளித்ததாக வல்லவா உங்கள் தலைவன் பசப்பினான். இப்போது அதைவிடப் பெருங் குற்றத்தை - பெரும் பழியைத் தான் செய்வதுடன் என்னையும் அதற்குத் தூண்டுகிறான். தேவியார் ஆணைபற்றிய அவன் கூற்றுப் பாசாங்கு என்பது இதனால் தெரிகிறது. ஆகவே அவன் பழியை நிறைவேற்றுங்கள். கடவுள் கோபம், தேவியார் சீற்றம் ஆகியவற்றுடன் என் சாபமும் உங்களைச் சூழட்டும். உங்களைப் போன்ற கயவர்களை