அப்பாத்துரையம் - 28
(268) || ஆட்டுவிக்கும் அந்தப் பழிகேடன் இருக்கும் உலகில் வாழ்வதை விட மண்ணுடன் மண்ணாவதே எனக்கும் என் வயிற்றுக் குழந்தைக்கும் நல்லது” என்று வாணுதல் சீறினாள்.
நடந்தது யாவற்றையும் மாக்கோதை ஊகித்துக் கொண்டான்.வாணுதல் மேல் கொலைஞர் கை நீட்டுமுன் அவன் புகுந்து அவர்கள் கை வாளைப் பறித்து அதைச் சுழற்றித் தாக்கினான். அவன் துறவி வேடத்தையும் அதற்கொவ்வா வீரத்தையும் கண்டு அவர்கள் கிலி கொண்டோடினர். ஓடும்போது வாணுதலுக்கென்று அவர்கள் தோண்டிய குழியில் கங்கன் விழுந்தான். திம்மன் ஓட்டத்தில் குவித்திருந்த மண்ணைச் சரியச் செய்ததால் அவன் அதிலிருந்து மீளாது புதையுண்டான். அந்நிலையில் வேறு எதையும் கவனியாமல் இனி இது தமக்கேற்ற இடமன்று என்று கண்டு மாக்கோதை வாணுதலை இட்டுக் கொண்டு மாறுவேடத்துடன் தஞ்சைக்கு மறைந்தோடினான்.
கொலைகாரர்களில் பிழைத்தவன் மூலம் செய்தி யறிந்து ஒய்யாரன் மாக்கோதையைத் தேடிக் காண முயன்றும் பயன்படவில்லை. அவன் நேரே மெய்யப்பனிடம் சென்று, தேவி அனுப்பிய தூதனாக நடந்தான். "தன் உள்ளரங்க மாது ஒருத்தி யுடன் காதல் விளையாட்டில் ஈடுபட்ட குற்றம் போதாதென்று உங்கள் சூழ் துணையரங்கனான மாக்கோதை மற்றொரு வாலிபனான வில்லாளனால் பழிப் பேச்சுக்காளான வாணுதல் தண்டனையைத் தடுத்துக் கடமையில் ஏவலன் ஒருவனைக் கொன்று வாணுதலுடன் தப்பியிருக்கிறான் அவன்.பழிக்காகத் தேவி தன்னிடம் மீந்துள்ள ஒரே குற்றவாளியான யாழ் நங்கை தலையை வாங்க உத்தரவிட்டிருக்கிறாள். நீங்களும் குற்றவாளி களில் உங்களிடம் மீந்துள்ள வில்லாளன் தலை வாங்கி உள்ளரங்க மதிப்பையும் தங்கள் மதிப்பையும் காக்க வேண்டு மென்பது தேவியாரின் விருப்பம். இதை அறிவிக்கவே வந்தேன்” என்றான்.
தன் தங்கையின் உள்ளப் பாங்குகளை முற்றிலும் அறிந்தவன் மெய்யப்பன். அவள் ஆணை கேட்டு அவன் திடுக்கிட்டான். சிறிது நேரம் அவன் உள்ளம் அதை நம்ப மறுத்தது. ஆயினும் தங்கையாக மட்டுமன்றி, ஒரு மாளிகை நாச்சியாராகவும் இருந்த அம்மாதரசியின் விருப்பென்று