பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

269

முறைப்படி தெரிவிக்கப்பட்ட செய்தியை அசட்டை செய்ய அவன் விரும்பவில்லை. அவனும் சீறி விழுபவன் போலப் பாவித்து வில்லாளனை வரவழைத்து அவனைக் குற்றஞ்சாட்டினான்.

66

என் துணைவனான உனக்கு நான் தரும் சலுகை ஒன்றுதான். அண்ணனிடம் விடை பெறவும் இறுதி வழிபாடு செய்யவும் இடம் தருகிறேன். அதன்பின் என் கையாலேயே உன் தலை வாங்குவேன்” என்றான். தன் பிழைக்குத் தண்டனையுடன் இந்த மதிப்பும் பெறுவதில் பெருமைகொண்ட வீரன் வில்லாளன் அவ்வாறே செய்தான். கடுநஞ்சுடைய மும்முடிகூடக் கண் கலக்கத்துடன் மெய்யப்பன் கருணை நீதி கண்டு பெருமித முற்றான்.வில்லாளனுடன் உட்சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மெய்யப்பன் கலங்கிய கண்களுடன் ஒரு அட்டைப் பெட்டி ஏந்தி வெளி வந்தான்.

66

ல்

"அன்பரே! என் தங்கை விருப்பப்படி என் துணைவன் தலை வாங்கிவிட்டேன். அதன் சின்னமாகத் தலையை இப்பெட்டியி லிட்டு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இதை என் தங்கையிடம் தந்து இத்தலை கண்ட பின், யாழ்நங்கை தலையையும் இதுபோலத் துணித்துக் கொள்க! தலைக்குப் பதில் தலையை என்னிடம் கொணரும் பொறுப்பை வையாபுரி வாணரும், உடனிருந்து தலைகள் இரண்டும் கண்டு உறுதி கூறும் சான்றாளராக மும்முடியும் அனுப்பப் பெறுக! என்றான்

மெய்யப்ப வாண்டையார்.

தன் திட்டம் இறுதியில் எளிதாக நிறைவேறுவது கண்டு வீறுடன் ஒய்யாரன் உள்ளரங்கமேறினான். அச்சமயம் தேவி தன் தோழியருடன் வள்ளுவரம்மானையும் சிலம்பக் கந்தக வரியும் ஆடிக்கொண்டிருந்தாள். ஒற்றர் மூலம் நடப்பனவற்றை ஓரளவு அறிந்திருந்தாலும், அறியாதவள்போலப் பார்த்து, யாழ் நங்கையின் துயராற்ற அவ்விளையாட்டிடையே அவள் அரும்பாடுபட்டு வந்தாள்.

வழக்கப்படி முன்னறிவிப்புச் செய்யாமல் ஒய்யாரன் நேரே உள் வருவதறிந்து அவள் திடுக்கிட்டாள். அவன் தூது அவளைப் பின்னும் கலங்கச் செய்தது. அன்பும் பெருந்தன்மையுள்ளமும் படைத்த தன் தமையன் ஆணைகளை அவளாலும் நம்ப முடியவில்லை.ஆயினும் முறைப்படி அனுப்பப்பட்ட தமையனின்