(270)
||
அப்பாத்துரையம் - 28
விருப்பத்தை மதிக்காமலிருக்கவும் அவள் துணியவில்லை. தமையன் திட்டப்படியே தன் தோழி யாழ் நங்கையைத் தானே தலைவாங்குவதாக அவளும் கூறி வில்லாளனின் தலையை உடன் வந்தவரிடமிருந்து பெற்றுக்கொண்டு அவள் யாழ் நங்கையுடன் உள்ளறை சென்றாள்.
சிறிது நேரத்தில் அவள் பெட்டியுடன் மற்றொரு பெட்டியைக் கொணர்ந்தாள். இரண்டையும் என் உள்ளரங்கத் தலைவியுடனிருந்து நீங்கள் திறந்து பார்த்த பின் மீண்டும் முத்திரையிட்டு என் அண்ணரிடம் ஒப்புவிக்க என்று கூறி அவள் உட்சென்றாள்.
உள்ளரங்கத் தலைவி செம்மாமலர் உண்மையில் ஒய்யாரன் தமக்கையே. அவன் கபடங்களை அவள் அறியாதவள். இரண்டு ன உயிர்கள் மாய்க்கப்பட்டுத் துடிக்கும் நிலை காண நேர்ந்ததே என்று அவளும் அவ்வுயிரினிடம் உரியவர்களாயமைந்த வையாபுரி வாணரும் மும்முடியும் ஏங்கி நின்றனர். ஆனால், கட்டிடம் திறக்கப்பட்டபோது கண்ட காட்சி அவர்களுக்கு இனிய அதிர்ச்சியையும் வியப்பார்வத்தையும் விழுமிய வீறமைதியையும் உண்டுபண்ணின. யாழ்நங்கையின் தலை இருக்க வேண்டிய பெட்டியில் அதற்குப் பதிலாக அருள்மொழி நாச்சியாரின் யாழே முறியடிக்கப்பட்டுக் கிடந்தது. மாக்கோதை யின் தலை எதிர்பார்க்கப்பட்ட பெட்டியில் மெய்யப்ப வாண்டையாரின் வில்லே முறிபட்டுக் கிடந்தது.
தஞ்சை முத்திமை நாயகமாம் தம் தலைவர், மாளிகை நாச்சியாராகிய தம் தலைவி ஆகிய இரு பெருந்தகை உள்ளங்களின் குடி மரபுக்கேற்ற அறிவு, பண்பு, அருள் ஆகியவற்றை இரு பெட்டிகளும் நங்கையர்க்கும் நம்பியர்க்கும் தெள்ளத் தெளிய விளக்கின. “தன் துணைவி யாழ் நங்கை தனக்கு யாழ் போன்ற இனிமையுடையவள். அந்த யாழ் முறிவே தன் துணை யாழ்நங்கை முறிவுக்கு ஒப்பு” என்பதைத் தேவி செயல் சுட்டிற்று. "தன் துணைவன் மாக்கோதை தனக்குக் கைவில் போன்றவன். வில்முறிவே மாக்கோதை முறிவுக்கு ஒப்பு” என்று மெய்யப்ப வாண்டையார் செயல் சுட்டிற்று.
மாண்டவராகக் கருதப்பட்ட இருவரும் தேவியின் அருளால் உயிர் பெற்று, மாற்று உரைத்ததும் துணை தேடி