பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

(271

அலைந்தனர். ஒய்யார நம்பியின் குற்றங்கள் விரைவில் வெளியான பின், அவர்களைத் தேடிக்கொணர்ந்து இணைவிக்கும் ம் பொறுப்பை அவள் அவனிடமே ஒப்படைத்தாள். தம்பி பிழைக்குக் கழுவாயாகச் செம்மாமலரும் உடன் சென்று இரு காதற்சோடிகளையும் தேடிக் கொணர்ந்தாள். தன் காதல் தெய்வமாகிய அருள் மொழியும் அவள் உயிர்த்தமையனும் செய்த செயல்கள் கேட்டு மகிழ்ந்த ஆரியூர்ப் பண்ணையார் தஞ்சை நாயகமும் அவர்கட்கு மணம் செய்வித்து இரு ஆட்சி நாயகங்களிலும் பதவியும் பரிசும் அளித்து மகிழ்ந்தனர்.